Dienstag, 1. Mai 2012

பகுதி-1 ஒட்டாத உறவுகள்

1


'ஒட்டாத உறவுகள்' இக்கதை 2003 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இக்காலகட்டத்துக்கேற்ப இக்கதை அமைந்துள்ளது.
ஐரோப்பாவில் வாழும் நம்மவர்கள் பல்வேறு எதிர்த்தாக்கங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக, பல்வேறு பிரச்சனைச்சனைகளின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்பிரச்சனைகளை மையமாக வைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது.
'ஒட்டாத உறவுகள்' நாவல் கோக்சவர்லன்டில் நடைபெற்ற பதின்மூன்றாவது வாணிவிழாவில் (2003) வெளியிடப்பட்டது.
இதனை வாசிக்க நினைக்கும் வாசகர்களே! உங்களுக்கு என் இனிய வணக்கம்.
உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.





சிவரஞ்சினி ஜேர்மன்மொழிப்புத்தகத்தைப் புரட்டிக்கொண்டு மனதில் புதிய இனிய கனவுகள் வளர, வானொலியில் ஒலிபரப்பிக்கொண்டிருந்த A9 பாதைச் சிறப்புச் செய்திகளைக்; கேட்டபடி, கோலில் இடப்பட்டிருந்த கதிரையில் உட்கார்ந்திருந்தாள். அவள் ஜேர்மனிக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகியும் ஈழநினைவுகள்தான்  அவளது நெஞ்சில் அலையடித்துக் கெண்டிருந்தன.
போரின் இன்னல்களில் பெரும்பகுதியை சிவரஞ்சினியும் கண்டு, கடந்து, அனுபவித்து வந்திருந்தாள். எத்தனை அழுகைக்குரல்கள்! ஆகாயமுகடுகளை உடைத்த ஐயோ என்ற அலறல் ஓலங்கள்!! கோலம் போட்டு வாழ்ந்த தமிழ்மக்கள் வீடு இழந்து, நாடு இழந்து ஓடிய அவலக்கோலங்கள்! போதும், போதும் என்ற நிலை வந்து, இனியும் தாங்காது என்று தமிழ்மண்ணே செந் நெருப்பாகக் கனல் விட, சமாதான ஆண்டாக 2002 விடிந்தது. நாடே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இனி என்ன செய்யப் போகிறார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் ஈழமக்களின் இதயஏக்கம் கடவுளின் கருணையினால் நல்லபடியாக அமைய வேண்டுமென்று வேண்டியபடியிருந்த சிவரஞ்சினி, தொலைபேசி வாத்திய பாணியில் ஒலி எழுப்ப, எழுந்து சென்று அதை எடுத்தாள். மறுமுனையில் 'அக்கா!' என்று அவள் தம்பி குமரனின் குரல் ஒலித்தது.

'சறோவின் எல்ரன் ஸ்பிறெக் ராக்(பெற்றோர்-ஆசிரியர் சந்தித்துக்கதைக்கும் நாள்), மறந்து போனன், இப்பதான் ஞாபகம் வந்தது. வேலையிலை சொல்லியிட்டு வீட்டை வந்து போக எனக்கு நேரம் போதாது. நீங்கள் போய்க் கதைச்சிட்டு வாங்கோ!'

'சரி போறன்;.' என்று சிவரஞ்சினி தொலைபேசியை வைத்துவிட்டு மணிக்கூட்டைப் பார்த்தாள். பத்துமணிக்கு இன்னும் சில நிமிடங்கள் தான் இருந்தன. அவசரமாக வெளிக்கிட்டபடி சறோவின் அறையைத்;திறந்தாள். சறோ கட்டிலில் போர்வைக்;குள் படுத்திருந்தபடி தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள்.

'இண்டைக்கு பெற்றோர் ஆசிரியர் கதைக்கிற நாளாம், ஏனடி சொல்லேல்லை? அப்பா, அம்மாவுக்குத்தான் அக்கறை இல்லை, மறந்து போச்சினம். நீயாவது ஞாபகப்;படுத்தியிருக்;கலாம்தானே.  விடிஞ்சு பத்து மணியாகுது, ஏழாம் வகுப்புப் படிக்கிறாய், எழும்பி முகம் கழுவாமல்  ரி.வி பார்த்துக் கொண்டிருக்கிறாய். என்ன பிள்ளையப்பா நீ...?'

சிவரஞ்சினி வீட்டை விட்டு இறங்கி, சறோவின் பள்ளிக்கூடத்தை நோக்கி அவசரமாக நடந்தாள். அப்போ, பக்கத்தில் கார் ஒன்று வந்து நின்றது. கார்க்கண்ணாடியைத் திறந்தபடி, 'எங்கை அவசரமாகப் போறீங்கள்?' என்று காருக்குள் இருந்து குரல் வந்தது.

சிவரஞ்சினி எட்டிப் பார்த்தாள். உள்ளே தொண்டர் உட்கார்ந்து இருந்தார். அவரை அவளுக்குத் தெரியும், இருந்தாலும் நேரடிப் பழக்கம் கிடையாது.

'எல்ரன் ஸ்பிறெக்ராக்... அதுதான் நேரமாகுது, பள்ளிக்கூடம் போகிறன்.'

'வாங்கோ! காரிலை கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.'

'பறவாயில்லை, நடந்து போகிறன்.'

'பயப்பிடாதேங்கோ! தொண்டர் என்று சொன்னால் இங்கை எல்லாருக்கும் தெரியும். பசு மாதிரி என்று சொல்லுவினம்.' சொன்னார் அவர்.
மறுக்கமுடியவில்லை, காரின் கதவைத் திறந்து பின்சீற்றில் உட்கார்;;ந்தாள் அவள்.
'உங்கடை மகளா சறோ?' கேட்டபடி கார்க்கண்ணாடி மூலம் பின்னாலிருந்த அவளைப் பார்த்தார் தொண்டர்.

'தம்பியின்ரை மகள்;. தாயும் தகப்பனும் வேலைக்குப் போயிட்டினம், அதுதான்; நான் போகிறன்.' என்று பதில் சொன்னாள் சிவரஞ்சினி.


'எல்ரன்; ஸ்பிறெக்ராக் என்றால் என்னெண்டு உங்கடை தம்பிக்கும் மச்சாளுக்கும் தெரியாது போலக்கிடக்கு. மாமி நீங்கள் போக ரீச்சர் திருப்பி விட்டாலும் விட்டிடுவா, போய்ப் பாருங்கோ!'

'அவைக்குத் தெரியாதெண்டில்லை.... மூன்று பிள்ளைகள் பள்ளிக்கூடம் போகுதுகள், ஒவ்வொருமுறையும் போய்க் கதைக்கிறவை. இண்டைக்கு வேலையிலை லீவு இல்லாததாலை தம்பி என்னைப் போகச் சொன்னான்....'

'கோவிக்கிறீங்கள் போலக்கிடக்கு!'

'சீ! சீ..!' என்று மறுத்தாள் சிவரஞ்சினி.

பள்ளிக்கூடத்தின் கார்; தரிப்பு இடத்தில் காரை நிற்பாட்ட, அவள் கதவைத் திறக்க முடியாமல் அந்தரப்பட, இறங்கித்; திறந்து விட்டார் தொண்டர்.

'தாங்ஸ்;' சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்துக்குள் சிவரஞ்சினி நடந்தாள்.

காருக்குள் ஏறி உட்hகார்ந்த தொண்டர், காரை இயக்கி வெளியே போகும்போது ஒரு முறை திரும்பிப் பார்த்தார்.

உசாராக சிவரஞ்சினி நடந்து போவது சித்தி நாடகத்தில் ராதிகா போனது போல இருக்க, ஒரு சிரிப்புடன் காரை ஓட்டினார்.

சறோவின் ஆசிரியை, சறோ படிப்பதில்லை என்று பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, பெற்றோரின் கவலையீனத்தையும் சுட்டிக்காட்டியதுடன், இன்னும் சில நாட்களுக்குள் முன்னேற்றம் இருக்காவிடின் வேறு பாடசாலைக்கு மாற்றி விடப் போவதாயும் எச்சரித்து விட்டார்.

சிவரஞ்சினி கவலையுடன் வீட்டுக்கு நடந்தாள்.
தம்பியும் மனைவியும் பென்னாம் பெரிய வீட்டை வாங்கிப்போட்டு காசு... காசு என்று நாள் முழுக்க வேலைக்குப் போக, பிள்ளைகள் மூன்றும் தான்தான் நினைத்தபடி விளையாட்டும் தொலைக்காட்சிப்;பெட்டியும் என்று பொழுதைக் கழிப்பதும் படியுங்கோ என்றால் படிச்சாச்சு என்று சொல்வதும் தினமும் நிகழும் நிகழ்ச்சிகளாகும்.
அகலக் கால் வைத்து பிள்ளைகளின் வாழ்க்கையைப் படுகுழிக்குள் விழுத்தப் போகிறார்கள்; என்று நினைத்தாள். ஏதும் சொல்லப்போனால் எரிச்சலில் சொல்வதாக நினைத்து மச்சாள் முகம் கறுக்கும். மாமிக்கு ஒன்றும் தெரியாது என்று மருமக்கள் வாய் நீளும்.
என்ன செய்வது என்று வேதனை நெஞ்சில் நெருட நடந்தாள்.

வேலையால் வந்த குமரனுடன்;,  சிவரஞ்;சினி பாடசாலையில், சறோ பற்றி ஆசிரியை கூறியதைக் கவலையுடன் தெரிவித்தாள். குமரனின் மனைவி மாலதியும் கேட்டவாறு சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தாள்.

'என்னடா தம்பி! நீயும் மச்சாளும் வேலைக்குப் போறதும் வீட்டை வந்து, வீட்டுவேலை, அது இதெண்டு நேரத்தைப் போக்கிறதுமா இருக்கிறீங்கள்.... பிள்ளையள் படிப்பிலை இப்பிடி மட்டமா இருக்குதுகள் என்று கொஞ்சமும் யோசிக்கிறீங்கள் இல்லை.'

'யோசிக்காமலே சிவாமச்சாள் ரியூசனுக்கு ஈரோவிலை காசைக் கொட்டுறம்....! இதுக்கு மேலை நாங்கள் என்ன செய்யிறது?' கணவனை முந்திக்கொண்டு பதில் சொன்னாள் மாலதி.

'காசைச் செலவழிச்சால் போதுமே? நீங்கள் அப்பா, அம்மா என்று இருக்கிறீங்கள், பிள்ளையளிலை அக்கறை இல்லாட்டி அவர்களின் வாழ்க்கை வீணாப்போயிடும்.'

'அக்கா! இவை என்ன குழந்தையளே...? உங்கை ஜேர்மன்காரரைப் பாருங்கோ! எங்களை மாதிரி படிப்புக்கு ஒரு சதம் செலவழிக்கிறாங்களே? பள்ளிக்கூடம் போகுதுகள், தான் தானே ஏதோ முன்னேறுதுகள். நாங்கள், கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுக்கிறம். இதுகள் விளையாடித் திரியிறதுக்கு நாங்கள் என்ன செய்யிறது...?'

'தம்பி! எங்கடை சனங்களின்ரை பிள்ளையளைப் பார்! எவ்வளவு கெட்டிக்காரப்பிள்ளைகளாக இருக்குதுகள். படிப்பிலையும் சரி, விளையாட்டிலையும் சரி போட்டி போட்டுக்கொண்டு முன்னுக்கு நிற்குதுகள். தமிழ் படிக்குதுகள், தமிழ்ப்பரீட்சை எடுக்குதுகள். இதெல்லாம் செய்துகொண்டு கிம்னாசியத்திலை ஜேர்மன்காரப் பிள்ளையளோடை சமனாகப் படிக்குதுகள். இதெல்லாம் உனக்கு எங்கை தெரியப்போகுது?' என்ற சிவரஞ்சினி, மாலதி கழுவி வைக்கும் பாத்திரங்களைத் துடைத்து அடுக்கி வைக்கத் தொடங்கினாள்.

'என்ன செய்யிறதெண்டு எனக்கெண்டா விளங்கேல்லை!' என்ற குமரனின் வார்த்தைகளில் கவலை படிந்திருந்தது.

'நாங்கள் தான் பகலிலை வீட்டிலை இல்லை, வேலைக்குப் போறம். மச்சாள்! நீங்கள் வீட்டிலை இருக்கிறீங்கள், பிள்ளையளைக் கொஞ்சம் கவனிக்கலாம்தானே!'

'நான் கவனிச்சதாலை தான்  உங்களிட்டை இதைச் சொல்லுறன். மாமிக்கு ஒன்றும் தெரியாது (கைனஆனுங); என்று மருமக்கள் சொல்லுறாங்கள், அதுக்கு  நீங்கள் சிரிச்சுக்கொண்டிருக்கிறியள். அவங்கள் என்ரை சொல்லுக் கேட்கிறாங்களே? ஏன் கனக்க... நீங்கள் சொல்லுறதையே அலட்சியம் செய்திட்டு, தாங்கள் நினைத்தபடி செய்யினம்....கட்டுப்பாடில்லை. நீங்கள் உங்கடை பாடு.. பிள்ளையள் தங்கடை பாடு... இப்பிடியே போனால் கேட்பார் இல்லாத பிள்ளையள் போலை, தான் தான் நினைத்தபடி திரியத் தொடங்கிவிடுவினம்.'

'நீங்கள் சொல்லுறதைக் கேட்டால் நான் வேலைக்குப் போகாமல் நின்று பிள்ளையளைப் பார்க்க வேண்டும்;, அது சரி வருமே...? உங்கடை தம்பியின்ரை சம்பளம் மட்டும் வீட்டுக்கடனுக்;குக்  கட்டக் காணுமே?'

'ஏன் காணாதே?' கேட்டான் குமரன்.

'உங்கடை காசு என்னத்துக்குக் காணும்? மற்ற ஆம்பிளையள் மாதிரி ஓவர்ரைம், பாட்ரைம் ஒண்டும் செய்ய மாட்டியள், பிறகு கேட்கிறியள் ஏன் காணாதே என்று....!'

தம்பியாரை எதிர்த்து மாலதி கதைப்பது சிவரஞ்சினிக்குப் பிடிக்கவில்லை. குமரன் நல்ல சம்பளம் எடுக்கிறான். கடினமான வேலை, களைத்து விழுந்துதான் வேலை முடிய வருவான். அவனைப் போய் இன்னும் ஓவர்ரைம், பாட்ரைம் வேலைக்குப் போறியோ என்று கேட்பது சிவரஞ்சினிக்கு மனிதத்தன்மையற்ற செயல் என்று தோன்றியது.

இது பல குடும்பங்களில் பழகிப்போனதொன்று. ஏதோ ஒரு விடயத்துக்குக் கருத்து பரிமாற ஆரம்பித்து, அது திசைமாறி வேறொரு பக்கம் திரும்பி கருத்து மோதலாய் வளர்ந்து விடுவதும் உண்டல்லவா?

அதுபோலத் தான் இங்கும் பிள்ளைகளின் நலனுக்குக் கருத்து வெளியிட, அது கணவன் மனைவி மோதலில் போய் நின்றது.

'வீடு வாங்கும் போது நீ வேலை செய்தனியே?  நீ வேலைக்குப் போவாயெண்டு நம்பியே வீடு வாங்கினனாங்கள்? சும்மா நாக்கு இருக்குது என்று நினைக்கிற நேரமெல்லாம் நீட்டக்கூடாது. நீ உழைக்கிறது உன்ரை செலவுக்கே போதாது...'


'என்ன கதைக்கிறீங்கள்? நான் என்ன....' என்று மாலதி மேலும் எதிர்வாதம் செய்வதற்குள் சிவரஞ்சினி எதிரே குறுக்கிட்டாள்.

'உங்கடை சண்டையைப் பிறகு வைத்துக் கொள்ளுங்கோ! இப்பிடித்தான் தினமும் வேலையாலை வந்து ஏதாவது கதைத்து சண்டை போடுவீங்கள், இல்லாட்டி ரிவியைப் போட்டுப் படம் பார்ப்பீங்கள், அல்லது பேத்டே அதுஇதெண்டு ஓடுவீங்கள். இந்தப் பிள்ளையளின்ரை எதிர்காலத்தைப் பற்றி ஒரு துளியும் யோசிக்க நேரமில்லை.' என்ற சிவரஞ்சினியைப் பார்த்து, மாலதி மனதுக்குள் இருந்ததை அடக்க முடியாமல் கொதித்து வந்த கோபத்தில்;;, தூக்கி விட்டவனையே கொட்டுகிற தேள் போல வார்த்தைகளினால் குத்தினாள்.

'மச்சாள்! நீங்கள் கனக்கக் கதைக்கிறீங்கள், உங்களைக் கூப்பிட்ட காசு இலட்சக்கணக்கிலை எங்களுக்குக் கடன்... அதைப் பற்றி யோசிச்சீங்களா....?'

அவளை மேலே தொடரவிடாமல்;, 'மாலதி!' என்று குமரன் அதட்டியும் அவள் விடவில்லை.

'உங்கடை செல்லத்தம்பி ரமணன் மனிசி, பிள்ளையோடை பென்ஸ்காரும் வாங்கி, ராஜா, ராணி மாதிரி சுத்திக் கொண்டு திரியினம்;, உங்களுக்குப் பட்ட கடனிலை பாதி தன்ரை பொறுப்பு என்று பெரிசா வாயடிச்சுப் போட்டு என்ன செய்தவர்...? ஏதோ ஐந்தோ, பத்தோ தந்திட்டு அந்தக் கதையே இல்லை.'

மாலதியின் வார்த்தைகள் நெஞ்சிலே கத்தியால் குத்தியது போல இருந்தும் வேதனையை வெளிக்காட்டாமல் கண்கள் கவலையில்  கண்ணீரைச் சொட்டப் பதில் சொன்னாள்.

'நான் வந்து உங்களுக்கு ஒரு பெரிய கடன் இருக்கெண்டது இப்ப நீங்கள் சொல்லித்தான் தெரியுது. இவளவு கடனைப்பட்டுத்;தான் என்னை நீங்கள் கூப்பிடுகிறீங்கள் என்று தெரிஞ்சிருந்தால் நான் வந்திருக்கமாட்டன். என்ரை தம்பிமார் இரண்டு பேர் வெளிநாட்டிலை இருக்கிறாங்கள்... நான் தூக்கி வளர்த்த தம்பிகள்... அவங்கள் வரச் சொல்;லுறாங்கள்  என்று தான் வந்திட்டன். நான் விசரி.... பார்த்த ரீச்சர் வேலையையும் தூக்கி எறிந்து போட்டு, இங்கை வந்து வாழ்க்கையை அழிச்சிட்டு நிற்கிறன்.'

'அக்கா, சும்மா ஏன் அழுகிறீங்கள்...? உங்களை யார் குறை சொன்னது...?'

'என்னை யாரும் குறை சொல்லேல்லை... என்ரை நிலையை இப்பதான் தெரிந்து கொண்டன். நான் இங்கை வரும்போது என்னோடு படிப்பித்த ரீச்சர்மார் 'உங்கடை தம்;பிகள் தங்கங்கள் நீங்கள் கொடுத்து வைச்சினீங்கள்' என்று பாராட்டி வழியனுப்பி வைச்சினம். இங்கை என்ரை தம்பிமாரின் நிலையைத் தெரிந்து கொள்;ள அறிவு போதேல்லை, கடவுள் தந்த அந்த உத்தியோகத்தையும் தொலைத்துவிட்டு, இங்கு வந்து சின்னஞ் சிறுசுகளிட்டை மாமிக்கு ஒண்டும் தெரியாது என்று கேட்கும்நிலை வருமென்று யாருக்குத் தெரியும்...?'

'மச்சாள்!' என்று மாலதி சிவரஞ்சினியைத் தேற்ற முற்பட்டாள்.

'உங்களை நான் குறை சொல்லேல்லை மச்சாள்... ரமணன்; அத்தான் சொன்னதைச் செய்யேல்லை என்று சொன்னனே தவிர, உங்களை நான் ஒன்றும் சொல்லேல்லை. நீங்கள் ஏன் கவலைப்படுகிறீங்கள்?' வயதுக்கு மூத்த சிவரஞ்சினி அழுவது அவளுக்கு என்னவோ போலிருந்தது.

'நானே என் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டன், யாருக்குத் தெரியும் இப்படி நடக்குமெண்டு...! சரி, தம்பி எனக்காக எவ்வளவு கடன் பட்டனி என்றதைச் சொல்லு....!'



'அக்கா! அதொண்டும் வேண்டாம்.'


'கேட்கிறா, சொல்லுங்கோவன். உங்கடை தம்பியிட்டை பாதிக்; காசை வாங்கித் தரேலும் எண்டாத் தரட்டும்.' சொன்னாள் மாலதி.

'தம்பியிட்டை காசு கேட்க நான் போகமாட்டன், அவன் தரமாட்டன் என்றால் என்னாலை தாங்கிக் கொள்ளமுடியாது.'

'ஏன் உங்கடை தம்பிதானே... இவருக்கு இருக்கிற பொறுப்புத்; தானே அவருக்கும் இருக்கு.'

'மச்சாள் நீங்கள் சொல்லுறது முழுக்க முழுக்கச் சரி, நான் தம்பியிட்டைக் கேட்கலாம், ஆனால் அவனும் கலியாணம் செய்து இருக்கிறான். அவனைக் கேட்க, அவனது பதிலுக்கு முதல் மனிசி எதிர்மாறாகப் பதில் சொன்னால்.... வேண்டாம்! நான் வர முன் என் தம்பிமார் என்ன உடன்படிக்கை செய்தினமோ தெரியாது. ஆனால் எனக்காகப் பட்ட கடனை நானே அடைக்கிறது தான் முறை... பொறுத்தனீங்கள் கொஞ்சநாள் பொறுங்கோ!'

'கொஞ்சநாள் எண்டால்....!'

'ஆறுமாதம்...'

சிவரஞ்சினியின் பதில் கேட்டு மாலதிக்குச் சிரிப்பு வந்தது.
'ஆயிரமோ, இரண்டாயிரமோ... நீங்கள் ஆறுமாதத்திலை தாறதுக்கு...? பத்து இலட்சம் ரூபாவெல்லே...!'

'பறவாயில்லை, அட்வான்ஸ்லெவலே படியாத என் தம்பிமார் ஜேர்மனிக்கு வந்து பத்து வருசத்திலை கோடீஸ்வரன்களாக இருக்கும்போது, அட்வான்ஸ்லெவலுக்கே படிப்பித்து, யூனிவெசிற்றிக்குப் பிள்ளைகளை அனுப்பிய என்னாலை ஆறு மாதத்துக்குள்ளை பத்துஇலட்சம் ரூபா கடனாக மாற என்றாலும் ஒரு வழி பிறக்காமலா போகும்?'

'அங்கத்தேப் படிப்பு இங்கை செல்லாது, இது மச்சாளுக்கு விளங்கேல்லை.'

'சிலது விளங்காமலே இருப்பதும் நல்லதுக்குத்தான்.' சொல்லிவிட்டு, சிவரஞ்சினி தன் அறைக்குட் சென்றாள்.

குமரனும் மாலதியும் மேலும் வாக்குவாதப்படுவது கேட்டுக் கொண்டேயிருந்தது.
என்ன கதைக்கிறார்கள் என்பது விளங்கவில்லை, தனது விவகாரம் தான் தொடர்கிறது என்பதை உணர்ந்தவளாய் கவலையுடன் உட்கார்ந்திருந்தாள்.
சறோவின் பள்ளிக்கூடக்கதையில் தொடங்கி, எங்கெங்கே போய் கடைசியில் வந்து தன் தலையில் வீழ்ந்து விட்டதை நினைத்து மனம் விம்மியழ, |நாராயணா...! இது என்னடா சோதனை? ஊரிலே நிம்மதியாக இருந்த என்னை இங்கு அனுப்பி இப்படி ஒரு நரகவாழ்க்கை வாழ விட்டிருக்கிறியே!| என்ற அவள் கண்களில்; மேசையில் கிடந்த அந்த சிறிய நிழற்படம்; பட, |நீங்கள் இருந்திருந்தால்; இப்படியெல்லாம் நடக்குமா...?| என்று அவள் உதடுகள் நடுங்கித் துடித்தன.

அது தங்கவேலுவின் படம், சிவரஞ்சினிக்;கு தம்பிமார் திருமணம் பேசி, ஏஜென்சிக்குக் காசு கொடுத்து அவளை இங்கு கூப்பிட, அவளும் வந்து இறங்க, அவரின் ஆயுள் போய்விட்டது. படுத்தவர் எழும்பவில்லை. ஜேர்மனிக்கு, எவ்வளவு தொல்லைகளைச் சந்தித்து, காடு, மலையெல்லாம் நடந்து, பட்டினி கிடந்து....வந்து இறங்கிவிட்டோம் என்ற சந்தோசத்தை ஒரு நாட்கூட அனுபவிக்கவில்லை....

|கடவுளே! உன்னை வணங்கிவிட்டுத்தானே புறப்பட்டேன். ஏன் இப்படியொரு இழப்பு...? வந்து இறங்க, இழவு விழும் என்று தெரிந்து கொண்டா என்னை வரவிட்டாய்...?|

சிவரஞ்சினி தங்கவேலுவை நேரே பார்த்ததில்லை. புகைப்படத்தில் பார்த்ததும் தொலைபேசியில் இடையிடை கதைத்ததும் தான்.

சிவரஞ்சினி வாழாவெட்டி என்று பலரும் சொல்கிறார்கள்.

அது எப்படி...? அவள் இன்னும் கலியாணமே செய்து கொள்ள வில்லையே...!
தம்பிமாரே, அக்கா இனிக் கலியாணம் செய்துகொள்ளமாட்டா என்று முடிவு செய்து, அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள்.

இத்தனைக்கும் சிவரஞ்சினி தங்கவேலுவை ஒரு நாட்கூட நேரே சந்தித்தது இல்லை.

பலர் வாழ்க்கையில் எல்லாமே ஒழுங்காக நடக்கிறது. சிலர் வாழ்க்கையில் எதுவுமே ஒழுங்கின்றிக் குழம்பி, ஒவ்வொன்றுக்கும் எதிர்நீச்சலிட்டுப் போராட வேண்டியிருக்கிறது.

தம்பிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று நினைத்து இங்கு வந்தால், அவர்கள் கீரியும் பாம்பும் மாதிரி ஒருவரையொருவர் கண்ணிலே காட்ட முடியாதளவுக்கு எதிரி கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.

எவ்வளவு ஒற்றுமையாக இருந்தார்கள். நாவூறு பட்டது போல இப்படிப் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு நிற்கிறார்கள்.

எல்லா நினைவுகளும் வந்து சிவரஞ்சினியின் நெஞ்சிலே புயலாக அடிக்க, அவள் பெருமூச்சு விட்டாள்.




2


மழை தூறி ஓய்ந்து, வானம் நீலச்சேலை விரிப்பது போல வெளித்தது. சிவரஞ்சினி மிதியுந்தில் நகருக்குள் இருக்கும் தாமோதரன்; கடைக்குச் சென்று கொண்டிருந்தாள்.

எவ்வளவு மழை பெய்தும் வெள்ளம் தேங்கி நிற்காத ஜேர்மன் நாட்டுத் தெருக்களில் மிதியுந்தில் செல்லும் போது, ஊரிலே பள்ளந்திட்டி கொண்ட ஒழுங்கைகளில் வெட்டி வெட்டிச்  சைக்கிளில் சென்ற தாயகநினைவுகள்   சுகமான தென்றல் போல அவள் நெஞ்சிலே பட்டுச் சென்றன.

கடையில் சனங்கள் இல்;லை, சாமான்களை அடுக்கிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த தாமோதரன், சிவரஞ்சினி வருவது கண்டு, 'வாங்கோ தங்கச்சி!' என்று முகம் மலர வரவேற்றார்.

தாமோதரனுக்கு அந்த நகரத்தில் தெரியாத ஆட்களே கிடையாது. எல்லோருடனும் சுமுகமாகப் பழகி, அந்தரம் அவசரத்துக்கு உதவிகளும் செய்பவர் தாமோதரன்.

சிவரஞ்சினி சாமான்களை எடுத்துக் கொண்டிருந்தாள்.
'குமரன் என்ன செய்கிறான்? கனநாளாக் காணேல்லை.' என்று கேட்டார் தாமோதரன்.

'சுகமாக இருக்கிறான்.' பதில் சொன்னாள்.

'உங்கடை விடயம் எல்லாம் கேள்விப்பட்டன், இருந்தாலும் உமக்கு நல்லகாலம் இருந்ததாலை கலியாணத்துக்கு முதலே இப்பிடி நடந்திட்டுது....'

'இதை என்னண்டு அண்ணை நல்லகாலம் என்று சொல்லுறது...? என்ரை கிரகம்தான் அவர் சாவுக்குக் காரணம் என்று என்மேலை எல்லாரும் பழி சுமத்துகினம்!' சிவரஞ்சினியின் கண்கள் கலங்கின.

'அந்த மனிசன் காட்அற்றாக்கிலை போனதுக்கும் உன்ரை கிரகத்துக்கும்    என்ன பிள்ளை சம்பந்தம்...? நீ அவரைச் சந்திக்கவேயில்லை. அவரின் விதி முடிந்திட்டுது, போயிட்டார், இதுக்கு உன்மேலை குறை சொல்லேலுமே...? ஆரும் அறிவு இல்லாமல் கதைக்கிறதை இந்தக்காதாலை வாங்கி, அந்தக்; காதாலை விட்டிட்டு, நடக்கிற காரியத்தைப் பார்க்கவேணும். இவங்கள் குமரனும் சரி, ரமணனும் சரி அக்கறை இல்லாதவன்களாக இருக்கிறாங்கள்.' என்றார் தாமோதரன்.


'அவங்கள் குடும்பகாரன்கள்..... அவரவர் சோலியைப் பார்க்கவே நேரமில்லாமல் இருக்கினம்.'

'என்றாலும் தங்கச்சி கடமை என்ற ஒன்று இருக்கே! உன்னைக் கூப்பிட்டவை உனக்கு ஒரு வழியைக் காட்டத்தானே வேணும்.'

'எனக்கு வழி காட்டாட்டிலும் அவங்கள் இரண்டு பேரும் ஒற்றுமை யாக இருந்தாலே போதும்.'

'ஏன்... ஏதும் பிரச்சனையே...?'

'வாறதில்லை, போறதில்லை... ஒருதரிலை ஒருதர் குற்றம் சாட்டிக் கொண்டே இருப்பினம்.

'அவங்கள் இரண்டு பேரும் ஒன்றா இருந்தவங்கள்... எனக்குத் தெரியும், கலியாணம் செய்தும் கொஞ்சநாள் ஒரே கொண்டாட்டம் மாலதியும் பூவிழியும் சிநேகிதிமார்தானே... ஒன்றா இருந்தவை. மாலதியை குமரன் விரும்பிச் செய்த பிறகு, மாலதியிட்டை பூவிழி வந்து போக, ரமணனுக்கும் அவவுக்கும் தொடர்பு வந்திட்டுது. கலியாணம் நல்லபடியாக நடந்தது. குமரனும் மாலதியும் எல்லாம் பொறுப்பாக நின்று நடத்தி வைச்சவை... பிறகு பிறகு ஒரே சண்டை தான். அவங்கள் இரண்டு பேரும் பிரச்சனை இல்லாத ஆக்கள், மனிசிமாருக்கை போட்டி... நான் பெரிசு, நீ பெரிசு என்ற போட்;டி... ஒன்றாகப் படிச்சவையாம், மாலதி பணக்காரியாம்;;.... பூவிழி படிப்பிலை கெட்டிக்காரியாம்  சிநேகிதிகளாக இருக்கேக்கை ஒன்றா இருந்தினம்... இப்ப ஒரு குடும்பத்துக்கை வந்ததும்;... யாரி பிடிக்குதுகள். இதைப்பற்றி நினைத்துக்  கவலைப்படுவதில் பிரயோசனமில்லை, நடப்பதைப் பார்க்க வேண்டியதுதான்.' என்று சமாதானம் கூறியவர்,
'நான் எதுக்கும் உன்ரை கலியாண விடயமாக குமரனோடும் ரமணனோடும் கதைக்கிறன்;' என்றார்.

என்னைக் கூப்பிட்ட காசைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கிற தம்பியள்;, இனிப் புதுசா என்ரை கலியாணம் பற்றிக் கதைக்க வரட்டாமே...?| என்று சொல்ல நாக்குத் துடித்த போதும் உள் வீட்டுக் குப்பையை நானே கிளறிக் காட்டக்கூடாது என்று நினைத்;தவளாய், சாமான்களுக்குக் கணக்குப் பார்த்துக் காசைக் கொடுத்துவிட்டு, கடையை விட்டு வெளியே இறங்கி தன் சைக்கிளை நோக்கி நடந்தவள்,
'ஹலோ!' என்று குரல் வரத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே, நேற்று அவளைக் காரில் ஏற்றிச் சென்றவர்;, சிவரஞ்சினியை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தார்.

தலையில் மூன்றில் இரண்டு பகுதி முடியுதிர்ந்து மொட்டை மினுங்க, மீதிமுடியில் வெள்ளை ஆங்காங்கே பளிச்சிட, மூக்குக் கண்ணாடிக்குள்;ளிருந்து கண்கள் பிரகாசிக்க, முகம் அழகாக சவரம் செய்யப்பட்டு, வாசனை மூக்கைத் தொட வந்த தொண்டர்
'சைக்கிள் ஓடுவீங்களா...?' ஏதாவது கதைக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் கேட்டார்.

அவரது கேள்விக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டுமென்று சிவரஞ்சினி நினைத்;தாள். ஆனால் ஏனோ எந்தப் பதிலும் சொல்லாமல் ஒரு சிரிப்புடன் நிறுத்திக் கொண்டாள்.

'புடலங்காய், மரவள்ளிக்கிழங்கு... எல்லாம் வாங்கிக் கொண்டு போறீங்கள்... இண்டைக்கு ஏதும் ஸ்பெசல் சாப்பாடோ...?'

'அப்படி ஒரு ஸ்பெசலும் இல்லை, தாமோதரமண்ணை கடையென்ன சங்கானைச் சந்தையா...? ஏதோ கடையிலை கிடைக்கிறதைத்தானே வாங்கிக்கொண்டு போய்ச் சமைக்க முடியும்.'

'சங்கானைச்சந்தை என்கிறீங்கள்.. அப்ப உங்கடை வீடு என்ன சங்கானைக்குக் கிட்டவா...?'

'இல்லை, பஸ்ஸிலை போகும்போது பார்க்கிறனான்.'

'நல்லாச் சமைப்;பீங்கள் போலைக்கிடக்கு!'

'யாரும் அப்படி இதுவரை சொல்லேல்லை.'

'சமைத்துத் தாங்கோ, சாப்பிட்டிட்டு நான் சொல்லுறன்!'

'அக்காவையும் கூட்டிக்கொண்டு வாங்கோ, நான் சமைத்துத்; தாறன்.'

'எந்த அக்காவை....?'

'உங்கடை மிஸ்ஸிஸ் தான்.'

'ஓ!' என்று சிரித்த தொண்டர், அவை இங்கை இருந்தால் நான் ஏன் உங்களிட்டைச் சமைத்துத்தாங்கோ என்று கேட்கிறன்?'

'ஊரிலை இருக்கினமோ.. ஏன்;; இன்னும் இங்;;கை கூப்பிடேல்லை?'

சிவரஞ்சினியின் கேள்விக்கு தொண்டர் பதில் கூறவில்லை. கொடுப்புக்குள் ஒரு சிரிப்புச் சிரித்தபடி தலையாட்டிவிட்டு, மூக்குக்கண்ணாடியைக் களற்றி சேட்டில் ஒரு முறை தேய்த்துத்  துடைத்துவிட்டு, மீண்டும் அணிந்து கொண்டார்.

'அப்ப வாங்கோ, மத்தியானம் சாப்பிடலாம்.' அழைப்பு விட்டபடி சைக்கிளின் முன்னிருந்த கூடையில் பொருட்களை வைத்துவிட்டு, அதை எடுத்துக்கொண்டு புறப்பட முற்பட்டாள்.

'நான் பகிடிக்குக் கேட்டனான், நீங்கள் சிரமப்பட வேண்டாம்.' மறுத்தார் தொண்டர்.

'எனக்கு ஒரு சிரமமுமில்லை, நீங்கள் வாங்கோ!'

'இல்லை, நீங்கள் தனியா இருக்கிறீங்கள், நான் அங்கை வாறது அழகில்லை. தம்பி குமரன்; வீட்டிலை நிற்கிற நேரம் ஒரு நாளைக்குக் கூப்பிடுங்கோ.. வாறன்!'

சிவரஞ்சினி நிமிர்ந்து அவர் முகத்தைப் பார்த்தாள். சிரிப்பு அங்கு சூரியன் போலப் பிரகாசித்தது.

'தொண்டர் உங்களுக்குப் பொருத்தமான பெயர்தான்.' சிவரஞ்சினி சொன்னாள்.

'என்ரை பெயர் அதில்லை... பெடியள் சும்மா கூப்பிட்டுக் கூப்பிட்டு உண்மையிலேயே என்னை ஒரு தொண்டன் ஆக்கிப் போட்டாங்கள்.'

'அப்ப உங்கடை பெயர்...?'

'திருநீலகண்டன்.'

'உலகின் முழுமுதற்கடவுளின் பெயரைத் தொண்;டராக்கிப் போட்டார்களே!' என்று சிரித்த சிவரஞ்சினி அவரிடமிருந்து விடைபெற்றாள்.

             


3




தாமோதரன் குமரன் வீட்டுக்கு வந்தார். பாதி சேட் காற்சட்டைக்குள்ளும் பாதி வெளியிலுமாக இருந்தது. கொடுப்புக்குள் வெற்றிலைபாக்கு...

'அண்ணை வாங்கோ!' குமரன் அவரை வரவேற்றான்.

'இப்பதானே எங்கடை வீடு தெரிஞ்சது?' மாலதி கேட்டாள்.

எங்கை நேரம் கிடைக்குது? விடிஞ்சால் பொழுதுபட்டால் ஓயாத வேலை, கடையெண்டால் தெரியும்தானே... மாறிமாறி ஏதாவது வந்து கொண்டேயிருக்கும்.'

'இருங்கோ அண்ணை!' என்று அவரை உட்கார வைத்து, 'என்ன குடிக்கிறீங்கள்?' என்று மாலதி கேட்டாள்.

'என்னென்றாலும் பறவாயில்லை' என்று தாமோதரன் சொல்ல, அவள் சமையலறையை நோக்கி நடந்தாள்.

'எங்கை அக்கா...?' தாமோதரன் கேட்டார்.

'பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறா... கூப்பிடவே?' குமரன் கேட்டான்.

'வேண்டாம்... அவவின் விடயமாகத்தான்  வந்தனான்.'

'ஏன் ஏதும் பிரச்சனையே...?'

'இல்லை குமரன், அக்காவுக்கு வயது போகுதெல்லேடா.... எங்கையாவது பார்த்துக் கலியாணத்தைச் செய்து வையன்.'

அப்போ, மாலதி தேநீருடன் வந்தாள்.

'யாருக்குக் கலியாணம்...?' கேட்டபடி மாலதி தேனீரைக் கொடுத்தாள்.

'அக்காவுக்குத்தான் கலியாணம் செய்து வைக்கச் சொல்லி தாமோதரமண்ணை சொல்லுறார்.'

'ஆர் மச்சாளுக்கோ...! அவ செய்யமாட்டா!' நறுக்கினது போல சொன்;;னாள் மாலதி.

தாமோதரம் திகைத்துப் போய் அவளையும் குமரனையும் பாரத்தார்.

'ஓமண்ணை... அக்கா இனிக் கலியாணம் செய்வா என்று நான் நினைக்கேல்லை... வயதும் போட்டுதுதானே.'

'அக்காவுக்கு எத்தினை வயது...?' தாமோதரன் சிரித்தார்.

'என்ன அண்ணை சிரிக்கிறீங்கள்?'

'மாலதி சொல்லுறா, சிவரஞ்சினி கலியாணம் செய்யமாட்டா என்று... நீ சொல்லுறாய் அவவுக்கு வயது போட்டுது என்று.... நான் சிரிக்காமல் வேறை என்ன செய்யிறது?' சுவிங்கம் சப்புவதுபோல வெற்றிலையைச் சப்பி, தன்னை அமைதிப் படுத்திக் கொண்டார்.

'இதிலை சிரிக்கிறதுக்கு என்ன இருக்கண்ணை?'

'அந்தப்பிள்ளை வாழும் வயது... அதுக்கு ஒரு வழி பண்ணுறதை விட்டிட்டு, நீங்கள் ஏதோ சொல்லிக்;கொண்டிருக்கிறீங்கள்.'

'அவ புருஸனைப் பறி கொடுத்தவ, கலியாணம் செய்யிறாவே...!'

உள்ளே படிப்பித்துக் கொண்டிருந்த சிவரஞ்சினிக்கு, தன் கதை கதைக்கிறார்கள் என்பது காதில் விழ, சற்றுக் கவனமாக உற்றுக் கேட்டாள்.

'கொஞ்சம் பொறு மாலதி!' மனைவியின் வாயை அடக்க முயன்றான் குமரன்.

'நீங்கள் பேசாமலிருங்கோ!' உறுமினாள் மாலதி. அவள் விழிகள் விரிந்து வெருட்டுவன போல் நின்றன.

'இல்லை தங்கச்சி, நீ சொல்லுறது பிழை...'

'என்ன பிழை என்கிறீங்கள்...? அவ வாழாவெட்டி என்றது பிழையோ?'

'பிழைதான், கலியாணமே செய்யேல்லை, பிறகென்னண்டு புருஸன் என்றும் அவர் செத்திட்டார் என்றும் சொல்லுவீங்கள்?'

'பேசி, எல்லாம் ஒழுங்கு செய்து கல்யாணமே முடிவான பிறகு தானே நடந்தது, இல்லை என்கிறீங்களோ...?'

'கலியாணம் பேசித்தான் முடிந்ததேதவிர, கலியாணம் முடிய வில்லையே தங்கச்சி! ஏன் நீங்கள் இப்பிடிக் கதைக்கிறீங்கள் என்றே விளங்கேல்லை.' தாமோதரத்தின் குரலில் கவலை தெரிந்தது.

'நீங்கள் சொல்லுறது ஒரு விதத்தில் சரி!' அடித்தொண்டையால் மெதுவாகச் சொன்னான் குமரன்.

'எந்தவிதத்தில் சரி என்கிறீங்கள்?' மாலதியின் நியாயமற்ற கேள்வியில் மிரட்டல் தெரிந்தது.

அப்போ, தாமோதரன் மாலதியைப் பார்த்துவிட்டு, குமரனை நோக்கி,
'தம்பி! நீ இருக்கிறாய்... உன்ரை தம்பி ரமணன் இருக்கிறான், உங்களுக்கு ஒரு கஸ்டமும் இல்லை என்னு நினைக்கிறன்....' அவர் முடிப்பதற்குள் மாலதி குறுக்கிட்டாள்.

'எங்களுக்கு ஒரு கஸ்டமும் இல்லையெண்டு உங்களுக்கு எப்;படித் தெரியுமண்ணை?'

'நல்ல கேள்வி..., அருமையான கேள்வி. இதை ஏன் குமரன் நீ கேட்கேல்லை..?'

குமரன் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தான்.

'தங்கச்சி! பார்த்தியா.... ஒரு கஸ்டமும் இருப்பதாகக் குமரனுக்குத் தெரியவில்லை.'

'ஏனப்பா பேசாமல் இருக்கிறீங்கள்? வங்கியிலை இருக்கிற கடனைச் சொல்லுங்கோவன்! இல்லாட்டி நான்; எல்லாம் ஏன் வேலைக்குப் போய் நாய் படாதபாடு படுகிறன்;? வீட்டிலை இருந்;து பிள்ளையளைப் பார்க்கத் தெரியாதே?'

'வீடு வாங்கினதாலை பாங்கிலை லோன் கிடக்கிறது உங்களுக்குத் தெரியும்தானே!' குமரன் சொன்னான்.

'இது உங்கடை புதுப்பிரச்சனை... சிவரஞ்சினியின் கலியாணம் குமரனின் முதற்பிரச்சனை, இதைத் தீர்க்காமல் வேறை பிரச்சனையை வளர்த்துக் கொண்டது உங்கடை பிழை!'

'என்ன நீங்கள்...? மூன்று பிள்ளையளோடை இருக்கிறம், ஒரு சொந்தவீடு வேணும்தானே, எவ்வளவு சனங்கள் ஆறு, ஏழு இலட்சம் செலவிலை வீடு வாங்குதுகள்... ஏன் நீங்களே அப்பிடித்தானே வீடு வாங்கியிருக்கிறீங்கள்... பிறகு நாங்கள் வாங்கியது பிழை என்கிறீங்கள்.'

'நான் என்ரை கடமையைச் செய்யாமல் குறையிலையே விட்டிட்டு
இருக்கிறன்...? வாய் இருக்கென்று யோசிக்காமல் கதைக்கக் கூடாது.'

தாமோதரன் சொற்கேட்டு இருவருமே மௌனமாக இருந்த வேளை... சிவரஞ்சினி, ஏதும் கேளாதவள்போல் சிரித்த முகத்துடன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.


ஏதோ சீரியஸாக் கதைக்குமாப் போலக்கிடக்கு!' கேட்டவாறு வந்து குமரனின் பக்கத்தில் அமர்ந்தாள்.

'எல்லாம் உன்ரை கலியாணம்பற்றித்தான்!' சுருக்கமாகச் சொன்னார் தாமோதரன்.

மற்ற இருவரும் சிவரஞ்சினியின் வாயிலிருந்து என்ன வார்த்;தைகள் பிறக்கப் போகின்றனவோ என்று குழப்பம் நிறைந்த மனத்துடன் அமர்ந்திருந்தனர்.

'எனக்கு இப்ப கலியாணத்துக்கு என்ன அவசரம்...? வந்த கடனையே திருப்பிக் கொடுக்கேல்லை!'

'அக்கா...!' என்று குறுக்கிட்டான் குமரன்.

'என்னடா தம்பி..? எனக்கு இனிக் கலியாணம் வேண்டாம்.. கொஞ்ச நாளிலை நான் ஊருக்குப் போகப்போறன்.'

'ஏன் ஆளுக்காள் ஒவ்வொரு குண்டைப் போட்டு ஒருத்தரை ஒருத்தர் குழப்பிறீங்கள்... நான் இங்கை வந்தது தேவையில்லாத கதை கதைக்க இல்லை.. இந்தப் பிள்ளைக்கு ஒரு சம்பந்தம் பேசலாமெண்டுதான் வந்தனான்அண்ணைதம்பி என்று இரண்டு சகோதரங்கள் இருந்து கொண்டு பொறுப்பில்;லாமல் திரியிறதைப் பார்த்து சனங்கள் கதைக்கிற கதை எனக்குத்  தான் தெரியும்.
அவனும் நீயும் எவ்வளவு ஒற்;றுமையாக இருந்தனீங்கள்... பாவம் கொக்காநீங்கள் இருவரும் அமெரிக்காவும் ஈராக்கும் போல சண்டைக்கோலம் போட்டுக்கொண்டு நிற்கிறது கண்டு எவ்வளவு கவலைப்படுகிறாகொஞ்சம் யோசித்துப் பார்!' என்று சற்றுக் காரமாகவே தாமோதரன் சொன்னார்.

குமரன் பதில் சொல்லமுடியாமல் நின்றான்.

'ரமணன்அத்தான் ஓரளவுக்குப் பறவாயில்லைஆனால் பூவிழியோடை பழகேலாது... எதுக்கெடுத்தாலும் விவாதம்... விமர்சனம் செய்து கொண்டே நிற்பா... சீ அவையின்ரை உறவு எங்களுக்கு வேண்டாம்.' என்று மாலதி சொல்லசிவரஞ்சினியின் கண்கள் கலங்கி வழிந்தன.

'தங்கச்சி மாலதிஅவையின்ரை உறவு எங்களுக்கு வேண்டாம்  என்று சொல்ல நீ யாரம்மா....? நீ இந்த வீட்டுக்கு வாழ வந்தனீவாழ்;... வடிவா வாழ்.. ஆனால்...!'

'நான் இந்த வீட்டுக்கு வாழ வரேல்லை... இது என்ரை வீடுஇதிலை இவருக்குப் பாதியென்றால் எனக்கும் பாதி உரிமை இருக்குநீங்கள் சொல்லுறதைப் பார்த்தால் இவற்றை வீட்டுக்கு நான் வாழ வந்த மாதிரியெல்லே இருக்கு!'

தாமோதரத்துக்குச் சிரிப்பு வந்தது.
'நான் சொன்னது உனக்குப் புரியேல்லை என்று நினைக்கிறன்பத்து லோட் கல்லைப் பறித்தால் ஒரு வீட்டைக் கட்டிப் போட்டுப் போகலாம்ஒரு வீடு மட்டும் குடும்பமாகிவிடாதுகொட்டிலுக்குள் இருந்தாலும் நல்ல குடும்பம் ஒரு கோயில்... மறந்து விடாதை!'

'யார் என்ன சொன்னாலும் நான் அங்கை போகப் போறதுமில்லைஅவை என்ரை வீட்டுக்கு வரத் தேவையும் இல்;லை.' வெட்டுவது போலக் கூறினாள் மாலதி.

'நீ ஒரு தாய்இப்பிடிச் சொல்லக்கூடாதுநீயும் மூன்று பிள்ளைகளைப் பெத்திருக்கிறாய்;, அவை வளர்ந்துகலியாணம் செய்து இப்பிடிச் சண்டை பிடித்தால் உன்னுடைய மனம் என்ன பாடுபடும்சகோதரங்கள் ஒற்றுமையாக இருக்கவேணும்.'

'உங்கடை பேச்சைத் தட்டுறன் என்று கோவிக்கக்கூடாது அண்ணைஎன்ரை முடிவு இதுதான்வேணுமென்றால் அவர் போய்  அங்கையே இருந்து கொண்டாடட்டும்நானும் பிள்ளைகளும் எங்கையாவது துலைந்து போறம்!'

தாமோதரனுக்குக் கோபம் பொறுமையின் எல்லையை உடைத்து விட்டதுமேசையில் ஓங்கி ஒரு அடி அடித்து விட்டு எழுந்து நின்றார்.

'அண்ணை கோவிக்காதேங்கோ...!' என்று குமரனும் சிவரஞ்சினியும் அவரைச் சமாதானப்படுத்தினர்.

'ஒரு மனிசர் வாழும் வீடு என்று நினைச்சுத்தான் படியேறி இங்கை வந்தனான்நான் என்ன வேலைவெட்டியில்லாத பிச்சைக்காரன் என்று நினைச்சிட்டீங்கள் போலக் கிடக்குநீயும் பிள்ளையளும் துலைந்து போகப் போறீங்களோ...? என்ன தங்கச்சி வெருட்டுறாய்அங... இவங்களோடை கூடப்பிறந்த இந்தப் பிள்ளையின் வயிறு எவ்வளவு பற்றி எரியும்இவங்களைப் பெற்றவள் உயிரோடு இருந்திருந்தால் எவ்வளவு கவலைப்படுவாள்உனக்குத் தெரியுமாஒற்றுமையாக இரு பிள்ளை என்றால் நானும் பிள்ளையளும் எங்கையாவது போயிடுவம் என்கிறாய்.. எங்கை போகப் போறாய்வீட்டுக்கு வீடு வாசற்படிதான் பிள்ளை...!' என்று சொன்னவர்;,
'எனக்கு நேரமாகுதுஎன்று விட்டுப் புறப்பட்டார்.

குமரன் அவரை வழியனுப்ப வாசல் வரை வந்தான்.

'கோபிக்காதேங்கோ அண்ணைமாலதி வாயில்வந்ததைச் சொல்லிப்;போட்டாள்நீங்கள் ஒன்றையும் மனதிலை வைச்சுக் கொள்ளாதேங்கோ.' என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில் நின்றான்.

'எனக்கொரு கோபமும் இல்லையடா குமரன்சகோதரங்கள் ஒற்;றுமையாக இருக்கவேணும்இது ஒரு பெரிய பலம் என்று உன்ரை மனிசிக்கு விளங்கேல்லைஅவ ஒரு மனைவி என்ற நிலையில் நின்று போட்டி போட்டுக் கதைக்கிறாவே தவிரஒரு தாயின் நிலையயில் யோசித்துப் பார்க்கவில்லைநீங்களும் அவையும் இப்பிடி யாரி கட்டிக் கொண்டிருந்தால்வருங்காலத்தில் பிள்ளைகளும் அப்பிடித்தானே வரப் போகுதுகள்பெரியப்பாசிற்றப்பா என்ற பாசமில்லாமல்;, ஒற்றுமையில்லாமல் அலையுங்கள் என்றதைச் சிந்தித்துப் பார்க்கேல்லை!' என்று கூறிவிட்டுத்தன் காரில் ஏறிப் புறப்பட்டார்.    






4

தமிழ் படிக்கும் பிள்ளைகள் பலரும் பரீட்சைக்கு மிக ஆர்வமாகப் படிப்பதையும் பெற்றோர்கள் கூடிதங்கள் பிள்ளைகளின் தமிழ்க்கல்வி பற்றிக் கதைப்பதும் சிவரஞ்சினியின் காதில் விழதன் தம்பியின் பிள்ளைகள் தமிழ் தெரியாமல் வளர்கிறார்களே என்று கவலையடைந்தாள்.

பிள்ளைகள் தமிழ் படிப்பது பற்றிதம்பிக்கோமனைவிக்கோ அக்கறையில்லை என்பது அவளுக்குத் தெரியும்இதுபற்றி பலமுறை கதை தொடங்கிஅவள் தொண்டை நோ எடுத்ததே தவிரஅவர்கள் தாய்மொழியாம் தமிழ்  தங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் என்பதை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள்.

அன்று மீண்டும் சிவரஞ்சினி தமிழின் முக்கியத்துவம் பற்றித் தம்பியுடன் கதைத்தாள்.

'எல்லாப் பிள்ளையளும் தமிழ் படித்துசோதனையும் எழுதப் போகுதுகள்;...  உன்ரை பிள்ளையளையும் படிக்க விடன்.' என்று கூறிசிவரஞ்சினி குமரனைப் பார்த்தாள்.

அவன் கைத்தொலைபேசியின் தெறிகளை அழுத்தி ஏதோ பார்த்தபடி பதில் பேசாமல் இருந்தான்.
அப்போ மாலதியும் அங்கு வந்து உட்கார்ந்தாள்.

'என்ன தம்பி பேசாமல் இருக்கிறாய்..? இந்த வயதிலை பிள்ளையளுக்குத் தமிழைப் படிப்பிக்;காமல் பிறகு எப்ப படிப்பிக்கப் போறீங்கள்;?'

'அக்காஉங்களுக்கு ஒன்றும் தெரியாது... நீங்கள் சிலோனிலை இருந்து இப்ப வந்தனீங்கள்தமிழ்..தமிழ் என்று கதைக்கிறீங்கள்இங்கை பிறந்துவளர்ந்து வாழப் போகிற பிள்ளைகளுக்கு தமிழ் ஏன்இது விளங்காமல் பிள்ளையளைத் தமிழ் படிக்க விடு என்று ஓயாமற் கதைத்துக் கொண்டிருக்கிறீங்கள்!'

'உன்ரை பிள்ளையள் இங்கை பிறந்து வளர்ந்தாலும் அதுகள் தமிழ்ப்பிள்ளைகள் தானே... இல்லாட்டி ஜேர்மன்பிள்ளைகள் என்;று சொல்லப் போறியோ...?'

'அவங்களைக் கேளுங்கோ... நாங்கள் டொச்காரங்கள் என்று தானே சொல்லுறாங்கள்.'

'குழந்தைகளின் கதையும் ஒரு கதையென்று கதைக்கிறாய்... அதுகளுக்கு என்ன தம்பி தெரியும்நீங்கள் எல்லோ சொல்லிக் கொடுக்கவேணும்.'

'பள்ளிகூடத்திலையே வடிவாப் படிக்குதுகளில்லையெண்டு அடிக்கடி முறைப்பாடு வந்து கொண்டிருக்குஇதுக்குள்ளை தமிழ் படிக்க விட்டால் நல்ல கூத்தாகத்தான் இருக்கும்.' என்று தன் விருப்பமின்மையை நசுக்காக மாலதி வெளியிட்டாள்.

'என்ன மச்சாள்...! இவ்வளவு பிள்ளைகளும் படிக்குதுகள்... உங்கடை பிள்ளைகள் மட்டும் படிக்கமாட்டினம் என்று சொல்கிறீங்கள்...?'

'அக்காஇப்ப ஏன் இந்தத் தேவையில்லாத பிரச்சனை...? வீட்டிலை நேரமிருந்தால் சொல்லிக் கொடுங்கோஇல்லாட்டி அவங்கள் வளர்ந்து தங்கடை விருப்பப்படி செய்யட்டும்.'

'நல்ல தம்பியடா நீஎத்தனையோ பேர் தமிழ்த்தாய்க்காகத் தங்களையே தியாகம் செய்து கொண்டு இருக்கிற நிலையிலை நீ என்னடாசூடு சுரணையில்லாதவன் போல... இப்ப வேண்டாம்பிறகு பார்ப்பம்விருப்பம் என்றால் படிக்கட்டும்;, இல்லாட்டி விடட்டும்....! என்னடா தம்பி.. நாங்களும் அந்த மண்ணிலை விளைந்ததைத் தானே சாப்பிட்டு வளர்ந்தனாங்கள் என்றதை மறந்துபோய்ஏதோ வாயிலை வந்ததைக் கதைக்கிறாய்.'

'உங்கை தமிழ் படிக்கப் போய்;, தாய்மாரும் ரீச்சர்மாரும் இழுபறிப்படுவது தெரியாதே...! அதுக்குள்ளை நாங்களும் போய்  வம்பை விலைக்கு வாங்கவேணுமே?'

'மச்சாள்பிடிக்காட்டி விடுங்கோநல்லா நடக்கிற ஒரு செயற்பாட்டுக்குக் களங்கம் கற்பிக்காதேங்கோஎத்தனை பேர் தங்கள் பொன்னான நேரத்தை இறைத்து இந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துகினம் தெரியுமேஒன்றும் தெரிந்துகொள்ளாமல் எங்கேயோயாரோ சொன்னதைக் கேட்டுவாயிலே வந்தபடி உளறிவிடக்கூடாது.'

'உங்களுக்குத் தமிழ் என்றால் பிடிக்கும்சமாதானம் என்றால் அதைவிடப் பிடிக்கும்பொதுநலம் என்றால் இன்னும் பிடிக்கும்;, ஆனால் இவையொன்றும் சாப்பாடு போடாது மச்சாள்!'

'மிருகங்கள் சாப்பாடுதான் வாழ்க்கை என்று வாழுதுகள்அதுமாதிரி மனிதனும் வாழ்ந்தால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் என்ன மச்சாள் வித்தியாசம்;?'

பதில் சொல்ல முடியாமல் குமரனும் மாலதியும் அதுஇது என்று ஏதோ சமாளிக்க,

'உங்கடை பிள்ளைகள் தமிழ் படித்துஎழுதவாசிக்கத் தெரிந்தால் பிற்காலத்தில் உங்களுக்கும் நல்லதுபிள்ளைகளுக்கும் நல்லதுபடிப்பிக்க ஆள் இல்லைபாடசாலை இல்லை என்றால் சரிவசதியில்லைபிறகு பார்ப்பம் என்று தள்ளி வைக்கலாம்.
ஆனால் இங்கையே பள்ளிக்கூடம் பெரிய அளவிலை நடக்கும் போதுசந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாமல் இருக்கிறீங்கள்.. நான் என்ன சொல்லுறது?' என்று தன் மனக்கசப்பை வெளிப்படுத்திவிட்டுதன் அறைக்குட் சென்றாள்.
              



5


சிவரஞ்சினியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.

தாமோதரம்  அண்ணை வந்து உரமாகக் கதைத்துவிட்டுப் போனதன் எதிரொலி என்று சிவரஞ்சினி நினைத்துக் கொண்டாள்.

கலியாணம் வேணுமென்று சிவரஞ்சினி அலையவில்லைஆனால் தம்பி வீடடில் தான் இருந்து அவர்களுக்குக் கஸ்டம் கொடுப்பதை அவள் விரும்பவில்லை.

முதலில் தம்பிக்குதான் ஒரு பளுவாக இருப்பதாக அவள் எண்ணவில்லை. |நான் தூக்கி வளர்த்த என் தம்பிஎன்ற இரத்த உறவே மனமெங்கும் நிறைந்திருந்ததுநாளாக நாளாக தம்பியும் தம்பியும் சண்டை.... மச்சாளும் மச்சாளும் சண்டை... தம்பிக்கும் மச்சாளுக்கும் சண்டையென்று குடும்பமே யுத்தகளமாகிவிட்டது.

அதுமட்டுமல்லஅக்கா ஒரு சுமை என்று தம்பி குமரன் கருதுகிறானோ என்னவோஆனால் அவன் மனைவி மாலதி வெளிப்படையாகவே காட்டு;கிறாள்.

அந்தக்குடும்பத்தில் தான் ஒரு மூன்றாம் ஆள் என்று தெரிந்து கொண்டும் அங்கு தொடர்ந்து இருப்பதற்கு அவள் மனம் இடம் கொடுக்கவில்லை.

மருமக்களுக்காகப் பல மனக்கஸ்டங்களைத் தாங்கிக் கொண்டு இதுவரை இருந்துவிட்டாள்.

தாயும் சேயுமென்றாலும் வாயும் வயிறும் வேறுஎன்பது போல அக்கா தம்பி என்றாலும் அவன் குடும்பமாக இருக்;கும்போதுதான் அங்கு அவன் உதவியை நம்பி எத்தனை நாட்களுக்கு இருப்பது என்று எண்ணியவளாய்;, இந்தத் திருமணப்பேச்சுக்கு சிவரஞ்சினி உடன்பட்டிருந்தாள்.

பிற்பகல் இரண்டு மணி.

மாலதி தேநீர்வடைகேக்... யாவும் பரிமாறினாள்சிவரஞ்சினி சமையலறைக்குள் மாலதிக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்தாள்.

அந்தநேரம் ரமணனும் பூவிழியும் அவர்கள் மகன் விஸ்ணுவும் வந்தார்கள்.
இது சிவரஞ்சினியின் ஏற்பாடு.
|நான் கலியாணம் செய்ய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால்தம்பியையும் மனைவியையும் கூப்பிடுஇல்லாட்டிக் கலியாணக் கதையை விடு!| என்று அவள் கூறியதால் குமரன் ரமணனது வீட்டுக்குச் சென்று, 'அக்காவைப் பெண் பாரக்க வருகினம்வாங்கோ!' என்று அழைத்திருந்ததால் அவர்கள் வந்து இருந்தார்கள்.

அவர்களுக்கும் தேநீர்பலகாரம் கொடுக்கப்பட்டதுசிவரஞ்சினி யையும் அங்கு வந்து இருக்கும்படி கேட்கஅவளும் வந்து பூவிழிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

மாப்பிள்ளை அழகாகஉயரமாக இருந்தார்சாதகங்கள் ஏற்கனவே பார்த்துப் பொருத்தம் என்று சொல்லிவிட்டார்கள்.

மாப்பிள்ளை வீட்டாரோடு வந்த கேசவன் கூறினார்.
'நகைகள் நிறையப் போடவேணுமெண்டில்லைஅவவிடம் இருக்கிறதோடை வரலாம்.'

'அது பிரச்சனையில்லைநீங்கள் கேட்கிற நகை நாங்கள் போடுவம்!' என்றான் குமரன்.

'அது உங்கடை விருப்பம்ஆனால் சீதனம் இருபத்தையாயிரம் ஈரோடொனேசன் பத்தாயிரம் ஈரோ தரவேணும்மற்றது எல்லாம் நீங்கள் விரும்பினபடி செய்யலாம்.' என்றார் மாப்பிள்ளையின் அக்கா சாவித்திரி.

ஜேர்மனியநாட்டுச் சொகுசும் பொரியல்கரியல்இறைச்சி என்ற சுவைமிக்க உணவும் தந்த உருண்ட தேகம்காதில் மேலும் கீழும் தோடுகள்மூக்கில் ஒரு மின்னிவளையம்....... இது சாவித்திரியின் விசேட அடையாளங்கள்.

சிவரஞ்சினி ஆடிப்போனாள்இருபத்தைந்தும் பத்தும் முப்பத்தை யாயிரம் ஈரோ...! அம்மாடி...! என்று மலைத்துப் போய் நின்றாள்.

சில நிமிடங்கள் மௌனம் நிலவகேசவன் கேட்டார்.
'என்ன யோசிக்கிறீங்கள்...? இரண்டு தம்பிமாரும் வசதியாக இருக்கிறீங்கள்உங்கடை அக்காவுக்கு எவ்வளவு சீதனம் கொடுத்தனீங்கள் என்று கேட்டால்;, நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா...?'

சிவரஞ்சினிக்குச் சிரிப்பு வந்ததுஅடக்கிக் கொண்டாள்.

'வெளிநாட்டிலை என்னண்ணை ஈரோவிலை சீதனம் கேட்கிறீங்கள்;!' மாலதி கேட்டாள்.

'தங்கச்சிஜேர்மனி என்றதாலை ஈரோவிலை கேட்கிறம்இங்கிலன்ட் என்றால் பவுண்;ஸிலைஅமெரிக்கா என்றால் டொலரிலை கேட்;டிருப்பம்.'

'இது சட்டவிரோதம்தானே!'

'சட்டம்சட்டவிரோதம் என்ற கதை நமக்கேன் தங்கச்சிநாங்கள் கேட்கிறதைத் தரமுடிந்தால் கல்யாணம்இல்லாட்டிக் கதையை விடுங்கோ!' சொன்னார் கேசவன்.

மாப்பிள்ளை பேசாமற் சிரித்த முகத்துடன் இருந்தார்.
'நீங்கள் கலியாணம் செய்யேக்கை சீதனம் வாங்கேல்லையா?' ரமணனையும் குமரனையும் பார்த்துமாப்பிள்ளையின் அக்கா சாவித்திரி கேட்டாஅவ மூக்கிலிருந்த வளையம் ஆடியது.

'நாங்கள் கேட்கவில்லை!' குமரன் பதில் சொன்னான்.

'கேட்கேல்லையோ... வாங்கேல்லையோ?'

குமரன் மாலதியைப் பார்த்தான்அவள்பதில் சொன்னாள்.

'எங்களிட்டை இருந்த வீடுநிலம்மில்;... எல்லாத்தையும் அப்பா என்ரை பெயரிலை எழுதிவிட்டிருக்கிறார்பாங்கிலும் இலட்சக் கணக்கில் போட்டிருக்கிறார்... எவ்வளவு என்று எனக்கே தெரியாது.

'இதெல்லாம் உங்களுக்குத் தந்த சீதனம்தானே!'

'சீதனமென்று எப்படிச் சொல்லுறதுஅப்பா தானாகவே தந்து இருக்கிறார்.'

'அப்படித்தான் நாங்களும் கேட்கிறம்முப்பத்தையாயிரம் ஈரோஜேர்மனியிலை இருக்கிற உங்களுக்கு  ஒரு காசே...?' கேட்டார் கேசவன்.

அப்போ சிவரஞ்சினி பதில் சொன்னாள்.
'என்னைப் பொம்பிளை பார்க்க வந்திருக்கிறீங்கள்நானும் என் கருத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறன்சீதனம் கொடுத்து கலியாணம் செய்ய எனக்குச் சம்மதமில்லைஇப்பிடிச் சொன்னதாலை நான் வாய்க்காரி என்று நினைக்க வேண்டாம்நான் ஒரு குடும்பத்திலை போனால்என் குடும்பத்துக்கு எந்தக் கஸ்டமும் வராமற் பாதுகாக்க என்னாலை முடியும்;. நான் சீதனம் என்று கொண்டு வருகிறதென்றால்அது என் தம்பிமாரின் உழைப்பிலை இருந்து வந்ததே தவிரஎனது உழைப்பில்லை.' என்று சிவரஞ்சினி சொல்லசாவித்திரி பதில் சொன்னாள்அவள் கதையில் சோபாவே மேலும் கீழும் அசைந்தது.

'நீங்கள் சொல்லுறது சரிஆனால் எங்கடை வீட்டில் நாங்கள் நான்கு பொம்பிளைப்பிள்ளையள்நாலு பேருக்கும் சீதனம் கொடுத்துக் கல்யாணம் செய்து வைத்தவன் இவன்குளிர்ஐஸ் என்று பார்க்காமல் இராப்பகலா ஓடியோடி உழைத்த காசை எல்லாம் சீதனம் என்ற பெயரிலை நாங்கள் பறிச்சுப் போட்டம்கடைசித் தங்கச்சிக்குக் கலியாணம் முற்றாகிவிட்டதுஅவளின் மாப்பிள்ளைசீதனம் வேண்டாம்தானே கூப்பிடுகிறன் என்று சொன்னாலும் ஊரிலை இருக்கிற அவருடைய அக்கா சீதனத்தை வாங்கி எடுக்க ஒற்றைக்காலில் நிற்கிறாமாட்டமென்றால்  கலியாணம் குழம்பிவிடும்என்ன செய்யிறது....?'


'காசு எல்லாருக்கும் தேவைதான்அதை அவரவர் உழைத்துத் தான் சம்பாதிக்க வேணும்இன்னொருவற்றை உழைப்பை உறிஞ்சி மற்றவர் ஏப்பம் விடக்;கூடாதுதங்கச்சியின்ரை கலியாணத்துக்கு இவரை மட்டும் நம்பியிருக்காமல்சகோதரி நீங்களும் நல்லாயிருக்கிறீங்கள்பங்கிட்டுச் செய்யலாமேகோபிக்காதேங்கோஎங்கடை பழைய பழக்கமான இந்த  சீதனத்தாலைஎங்கள் இனமே சித்திரவதைப்;படுகுதுஇதை எல்லாரும் சேர்ந்து ஒழிக்க ஏன் முற்படுகிறீங்கள் இல்லை...?'

கேசவன் இதற்குப் பதில் சொன்னான்.
'முற்போக்கான கருத்துத் தான் தங்கச்;சிஆனால் எங்கடை குடும்பநிலைமைக்கு இந்தச்  சம்பந்தம்  பொருந்தாதுமூன்று பேருக்கு ஏற்கனவே சீதனம் கொடுத்திட்டம்இனி நாலாவது பெண்ணுக்கும் கொடுத்துத்தானாக வேண்டுமென்ற கட்;டாயம்.  அதுதான் உங்களிட்டைச் சீதனம் கேட்டோம்நீங்கள் தரமுடியாட்டி விடுங்கோவேறை இடத்திலை பார்க்கிறம்!'

கல்யாணப்பேச்சுக் குழம்பிவிட்டது.
எழுந்துபோக வெளிக்கிடும் போதுஇதுவரை பேசாமல் சிரித்த முகத்துடன்  இருந்த மாப்பிள்ளை சுகுமாரன்;, பெண்வீட்டாரைப் பார்த்து மன்னிக்கும் பாணியிற் கூறினார்.
'என்மீது உங்களுக்குக் கோபமாக இருக்கும்எண்பத்தைந்தாம்  ஆண்டு இங்கு வந்தனான்உழையுழை என்று உழைத்தன்றெஸ்றோறன்ற் வேலைதோட்டவேலைபேப்பர்வேலை என்று தினமும் பதினாறுபதினெட்டு மணித்தியாலங்கள் நித்திரை இல்லாமல்;, சாப்பாடில்லாமல் உழைத்துஇலட்சம் இலட்சமாக வீட்டுக்கு அனுப்பி என் குடும்பத்தைப் பார்த்துவிட்டன்இப்ப என்ரை இடதுபக்க முழங்காலிலை வருத்தம்இரண்டு தரம் ஒப்பறேசன் செய்தும் சரிவரேல்லைவேலைக்கு ஒழுங்காகப் போக முடியேல்லைமுதலாளி வேலையாலை நிற்பாட்டப் போவதாக எச்சரித்துக் கொண்டேயிருக்கிறார்என்ரை நிலையிலை நீங்கள் இருந்தால் என்ன செய்வீங்கள்;.... சொல்லுங்கோ!'

சிவரஞ்சினியின் கண்களில் ஈரம் தெரிந்ததுபதினாறுபதினேழு வருடங்கள் உழையுழையென்று உழைத்த மனிதனின் உழைப்;பை சீதனச்சூறாவளி பறித்துச் செல்லஏதுமில்லாமல் ஒரு கால் நொண்டியாகி நிற்கும் அவனின் நிலைஅவள் நெஞ்சை உருக வைத்துவிட்டது. |பாவம்என்று பரிதாபப்பட்டாளே தவிரஅவளால் வேறெதுவும் செய்ய முடியவில்லை.

மாலதி மாதிரிபணக்கார அப்பாவுக்கு மகளாகப் பிறந்திருந்தால் உதவி செய்யமுடியும்என்னுடைய நிலையில் நான் என்ன செய்வது?| கவலைப்பட்டது அவள் மனம்

'நான் என்றால் கலியாணம் வேண்டாமென்று தனியாக இருப்பன்வருத்தம் வந்தால் ஆஸ்பத்திரி இருக்குவயது போனால் முதியோர்இல்லம் இருக்குஇதைவிட்டிட்டு உங்களை மாதிரி பிச்சை எடுக்கிறது போல சீதனம் கேட்கமாட்டேன்.' என்ற மாலதியின் வார்த்தைகளினால் சுகுமாரனின் முகம் வாடிக் கறுத்தது.

'என்ன தங்கச்சி கதைக்கிறீர்?' என்று கோபமாக எழுந்த கேசவனைசுகுமாரன் அடக்கிமேலும் பேசவிடாது தடுத்து விட்டு,
'நான் கேட்டதுக்கு அவ தன்ரை கருத்தைச் சொன்னாஅதுக்கேன் நீங்கள் கோவிக்கிறீங்கள்எங்களுக்குப் பொருந்தாட்டி நாங்கள் போகவேண்டியதுதானே!' என்று கூறி விட்டுப் புறப்பட எழுந்தான்அவனுடன் மற்றவர்களும் எழுந்தார்கள்.

அப்போ சிவரஞ்சினி, 'நான் ஒன்;று சொல்லலாமா?' என்று வெளியே போக எழுந்தவர்களைப் பார்த்துக் கேட்டாள்.

'சொல்லுங்கோநீங்கள் சொல்லுறதைக் கேட்கத்தானே இங்கை வந்தனாங்கள்.' கிண்டலாகக் கூறினாள் மாப்பிள்ளையின் அக்கா சாவித்திரி.

'இவருக்கு நீங்கள் நான்கு சகோதரிகள்நல்ல அன்பாய் இருக்கிறீங்கள்;, இவர் உழைத்து மூன்று பேருக்கு சீதனம் எல்லாம் தந்துதிருமணம் செய்துவைத்துவசதியாகவும்  இருக்கும்போதுநாலாவது சகோதரியின் கலியாணத்துக்கும் இவர்தான் முழுப் பொறுப்பையும் ஏற்க வேணுமென்று ஏன் நினைக்கிறீங்கள்.....? நீங்கள் மூன்று சகோதரிகளுமே பங்கிட்டு அந்தச் செலவைப் பொறுக்கலாமே!'

'நல்ல கேள்வி...' என்று பதில் கூறிய சாவித்திரிசிவரஞ்சினியின் கருத்து சரிப்பட்டு வராது என்பதற்குக் காரணத்தைச் சொல்ல முற்படசுகுமாரன் குறுகிட்டு,
'அக்காஇது அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்று..' என்று சொல்லவிடாது தடுத்து,
'உங்களோடை நான் பிறகு கதைக்கிறன்!' என்று சிவரஞ்சினியைப் பார்த்துச் சொல்லிவிட்டு விடைபெற்றான்.
அவனுடன் மற்றவர்களும் விடைபெற்று வெளியேறினர்.


6

அவர்கள் போனபின் ரமணனும் பூவிழியும் போக எழுந்தார்கள்.
'நில்லுங்கோ சாப்பிட்டுப் போகலாம்!' தடுத்தாள் சிவரஞ்சினி.

ரமணன் மாலதியைப் பார்த்தான்அவள் மேசைத்துணியை நகத்தால் சுரண்டியவாறு ஏதோ யோசனையில் இருப்பவள் போல இருந்தாள்.

|அண்ணையோஅண்ணியோ நில்லுங்கோசாப்பிட்டுப் போகலாம் என்று கேட்காமலிருக்கும்போதுமேலும் அங்கு இருப்பது அழகல்லஎன்று நினைத்த ரமணன்மனைவியைப் பார்த்து, 'போவம்!' என்றான்.

பூவிழியும் சம்மதத்துடன் தலையாட்டினாள்.
இருவரும் எழுந்;து மகன் விஸ்ணுவையும் அழைத்துக்கொண்டு போகப் புறப்பட்டார்கள்.

'என்னடா தம்பிசாப்பிட்டுப் போங்கோ என்றால் செவிடன் மாதிரிபோவம் என்று வெளிக்கிடுகிறாய்!' என்று கவலையுடன் கேட்;டவள்;, குமரனைப் பார்த்துமறியடாஎன்று சைகையால் வலியுறுத்தினாள்.

'அக்கா கேட்கிறாகேளாத மாதிரிப் போறீங்கள்;!' என்று குமரன் அவர்களைப் பார்த்துக் கேட்டான்.

மாலதி எழுந்து உள்ளே போனாள்.

'பார்அண்ணிக்கு ஒரு வார்த்தை வரேல்லைவீட்டுக்கு வந்த மனிசரை மதிக்கத் தெரியாத நீங்கள்பேருக்கு அண்ணை அண்ணி என்று இருக்கிறீங்கள்!'

'ஏன் நீங்கள் மட்டும் பெரிசா அண்ணைமச்சாள் என்று பாசமாத்தான் இருக்கிறீங்கள்... சும்மா ஏன் குப்பையைக் கிளறுறீங்கள்?'

'என்ன குப்பையைக் கிளறுறம்...? அக்காவுக்குக் கல்யாணம் பேச வருகினமென்று வரச் சொன்னீங்கள்வந்தாச்சுபோயாச்சு... இது பிழையோ?' கேட்டான் ரமணன்.

அப்போ வந்த மாலதி, 'வாயாலை எல்லாம் சொல்லுவீங்கள்செயலிலை ஒன்றுமில்லை.....' என்றாள்.

ரமணனும் பூவிழியும் ஒன்றும் விளங்காமல் நின்றார்கள்.
மாலதி இப்படித் திடீரென்று வந்து சண்டையைத் தொடக்குவாள் என்று ரமணனோசிவரஞ்சினியோ எதிர்பார்க்கவில்லை.

'நாங்கள் போயிட்டு வாறம்!' என்று சண்டையை வளர்க்க விரும்பாதவனாய் ரமணன் வெளிறே முனைந்தான்.

மாலதியே மேலும் வார்த்தைகளைக் கூரம்பு பாய்ச்சுவது போன்று வீசினாள்.

'அக்கா வந்து இரண்டு வருடம் முடிஞ்சுது... கூப்பிட்ட காசு பாதி உடனே தாறன் என்றீங்கள்.... எங்கை?'

அப்போ பூவிழி சொன்னாள்,
'இதுக்குத்தான் நான் வரமாட்டன் என்று சொன்னனான்இனி வாங்கிக் கட்டுங்கோ!'


'வெட்கம்ரோசம்வேண்டாம்.... சீ... பென்ஸ்கார் மட்டும் புத்தம் புதுசா வாங்கக் காசு இருக்கு!'

சிவரஞ்சினி இடையில் குறுக்கிட்டு மாலதியைத் தடுத்தாள்.
'என்ன மச்சாள் கதைக்கிறீங்கள்இது கதைக்கவோ அதுகளை இங்கை வரச் சொன்னனீங்கள்...?'

'நீங்கள் கதைக்காதேங்கோஉங்களுக்கு எங்கடை கஸ்டம் தெரியுமேமுட்டை போட்ட கோழிக்குத்தான் வயிற்றெரிச்சல் தெரியும்....!'

'இப்ப ஏன் அந்த இந்தக் கதையளை...? வந்த வேலை முடிஞ்சுது... தம்பிநீ மச்சாளைக் கூட்டிக்கொண்டு போஎன்னாலை நீங்கள் சண்டை பிடிக்க வேண்டாம்... போங்கோ!' என்று கண்ணீர் தழும்ப நின்றாள் சிவரஞ்சினி.

குமரன் நடப்பதைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தான்.

'வாயைத் திறந்து கதையன்என்ன பிடிச்ச பிள்ளையார் மாதிரிப் பேசாமல் இருக்கிறாய்தமையனும் தம்பியும் தங்கடை பிரச்சனைகளைக் கதைக்கிறதை விட்டிட்டுமற்றவை கதைக்கக் கூடாது....' என்றாள் சிவரஞ்சினி.

'மற்றவை கதைக்கக்கூடாதென்று எப்படிச் சொல்லுவீங்கள் சிவரஞ்சினி மச்சாள்;? நான் உழைத்த காசும் அதுக்குள்ளை இருக்குகேட்பன்தானே!'

அப்போ பூவிழி,
'நாங்கள் தரமாட்டமென்று சொல்லேல்லைகொடுத்த இடத்தில் காசைத் திருப்பி வாங்க முடியேல்லை,  வட்டியும் முதலும் இல்லாமற் போகிற நிலையிலை கிடக்குஇது தெரிந்து கொண்டும் வேணுமென்று செய்யிற மாதிரிக் கதைக்;கிறீங்கள்!' என்று சொன்னாள்.

'வேணுமென்றுதான் செய்யிறீங்கள்நாங்கள் புதுக்கார் வாங்கியிட்டமென்றுதானேஅதைவிடப் பெரிசா வாங்க வேணு  மென்று பென்ஸ் கொம்பனியிலை சொல்லி எடுத்தனீங்கள்!' கேட்டாள் மாலதி.

'உங்களைப் பார்த்து நாங்கள் ஒன்றும் செய்யேல்லைவீடு வாங்கியிருக்கிறீங்கள்... நாங்கள் வீடு வாங்கிப்போட்டமே...?'

'அது உங்களாலை முடியாதுஅப்பிடித்தான் வீடு வாங்கினாலும் எங்கடை வீடு மாதிரி வாங்கிக்கொள்ள மாட்டீங்கள்!' அடித்தது மாதிரிச் சொன்னாள் மாலதி.

'வேண்டாம்உங்கடை விவாதத்தை வேறை எங்கையாவது வைச்சுக்கொள்ளுங்கோவாதாடிவாதாடிக் குடும்பங்களையே குட்டிச்சுவராக்கப் போறீங்கள்நீ பெரிசுநான் பெரிசு என்று மோதிஎன் தம்பியளைத்தான் விரோதிகளாக்கிக் கொண்டிருக் கிறீங்கள். |ஒற்றுமைஎன்ற சொல்லை நீங்கள் கேள்விப்படவே இல்லையாஎல்லாம் என்னாலை வந்ததுஎன்னைக் கூப்பிட்டு விட்டுஎன்னாலை நீங்கள் சண்டை பிடிக்கிறீங்கள்;... ஏதோதம்பியள் விரும்பி ஆசையாகச் செய்யிறாங்கள் என்று நினைத்து நானும் வந்திட்டன்இப்படியென்று எனக்கென்ன தெரியும்?
போதாததுக்குஎன்ரை விதி.... அந்த மனிசனும் மண்டையைப் போட்டிட்டார்தாய்நாட்டை விட்டுவெளிநாடு பெரிதென்று பேராசையில் வந்த எனக்குஇதுவும் வேணும்;;;, இன்னும் வேணும்என்று சிவரஞ்சினி பூவிழிக்கும் மாலதிக்கும் நடுவே வந்து தலையில் அடித்து அழமாலதி உள்ளே போய்விட்டாள்பூவிழி வெளியே நடந்தாள்ரமணன் மகனையும் கூட்டிக் கொண்டு புறப்பட்டான்.

அவர்கள் போவதைப்;பார்த்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்து
இருந்த குமரனைப் பார்த்து,
'எனக்கு ஒரு வேலை எடுத்துத்தாடா.... உன்ரை காலிலை விழுந்து கேட்கிறன்எடுக்கிற சம்பளத்தை அப்படியே மாதம் மாதம் உங்களிட்டைத் தாறன்கடன் முடிந்ததும் ஒருநாட்கூட இங்கு இருக்கமாட்டன்;!' சொல்லிவிட்டுத் தன் அறைக்குட் போய் விட்டாள்.

குமரன் தனியாக உட்கார்ந்திருந்தான்அவன் மனதில் ஒரு ஆழமான உறுத்தல், இந்தக்கடன் கதையை  இன்று எடுக்காமல் விட்டிருக்கலாம்அக்கா கலியாணம் குழம்பிய கவலையில் இருக்கும்போதுதேவையில்லாமல் மாலதி இதைத் தொடக்கிவீட்டுக்கு வந்த தம்பிமனைவி இரண்டு பேரோடும் வீண் மனஸ்தாபத்தை வளர்த்துப்போட்டம்;| என்று அவன் மனதில் சகோதரபாசம் மெதுவாகக் குரல் கொடுத்தது.

அப்போ மாலதி ஹோலுக்குள் வந்தாள்.
உன்னாலை தான் எல்லாம்நீ கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாம் என்று சொல்ல நினைத்தவன்பிறகு |உள்ளதைத்தானே கேட்டிருக்கிறேன் என்றுஅவள் தன் நியாயம் தான் சரி என்பாள் என எண்ணி, |சும்மா ஏன் தேவையில்லாமல்என்று பேசாமலிருந்து விட்டான்.


'உங்கடை அக்கா கல்யாணம் செய்துகொள்ளமாட்டாநீங்கள்;, அவர் தாமோதரமண்ணை சொல்லிப்போட்டாரென்று தேவை இல்லாமற் பிரச்சனையை விலைக்கு வாங்கிறீங்கள்.... இனிமேல் இது ஒன்றும் வேண்டாம்.'

குமரன் மாலதியை நிமிர்ந்து பார்த்தான்.
'அவ செத்த மனிசனையே நினைச்சுக் கொண்டிருக்கிறாஇங்கை வீட்டிலை எத்தினை வேலை கிடக்கு...? அதைச் செய்யாமல் டொச் படிக்கிறன் என்று புத்தகத்தையும் தூக்கிக் கொண்டு திரியிறா!'

'அதுக்கு நான் என்ன செய்ய....?' கேட்டான் குமரன்.

'வாயைத் திறந்து சொல்லுங்கோவன்இந்த வயதிலை அவவுக்கு என்னத்துக்குப் படிப்புபெரிய ரீச்சர் வேலை பார்த்தவவாம்இங்கையும் ஏதோ படித்துக் கிழித்துப் போடலாமென்று அவவுக்குப் பெரிய நினைப்பு!'

'அவவுக்குக் கேட்கப் போகுதுமெதுவாகக் கதைதம்பியோடை தேவையில்லாமல் சண்டை பிடிக்கிறமாதிரி புதிசா இனி அக்காவோடையும் தொடங்காமல்அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருங்கோ!'

'என்னப்பாநியாயத்தைக் கதைக்க வேண்டாமேநீங்கள் உழைக்கிறது வீட்டுக்கடனோடேயே போயிடும்மிச்சம் முழுக்க என்ரை உழைப்பிலைதானே நடக்குதுவேலைக்குப் போட்டு வந்துபிடிச்ச பிள்ளையார் மாதிரி வீட்டுக்கை குந்திக்கொண்டு இருப்பீங்கள்நான் தான் வீட்டுவேலையும் செய்யிறது....'

'ஏன் அக்கா ஒன்றும் செய்யிறதில்லையே?'

'அவ என்னத்தை வெட்டிப்பிடுங்கிறாஅவவிலை முழிச்சிட்டு வெளியிலை போனாலே ஒன்றும் சரிப்படாது.' முகத்தை நெளித்து மாலதி சொன்னபோது குமரனுக்குக் கோபம்;தான் வந்தது.

கையோங்கி அடிக்க இயலுமா....?
தன் உழைப்பிலேதான் அவனும் சாப்பிடுவதாக ஏற்கனவே அடிச்சது போலச் சொல்லிவிட்டாள்கதைக்கப்போனால் அது இதென்று கத்தி நியாயம் தன் பக்கம் வருவதற்காகத் தலையையும் சுவரிலே போய் மோதுவாள்.
இதுக்குத் தான் விரலுக்கேற்ற வீக்கம் வேண்டுமென்று சொல்வார்கள்.

|உங்களாலை வீடு வாங்க முடியாதுஅப்படி வாங்கினாலும் என்ரை வீடு மாதிரி நல்ல ஒரு வீடு வாங்கவே முடியாதுஎன்று மாலதி ரமணனையும் பூவிழியையும் பார்த்துச் சொன்ன வார்த்தைகள் அப்போ அவன் காதில் எதிரொலித்தன.
|என்ன திமிரான பேச்சு...!|
தம்பியைப் பார்த்து இவள் இப்படிக் கேட்டபோது ஒன்றுமே பேசாமல் இருந்துவிட்டேனேஏதாவது சொல்லியிருக்கலாம்சொல்லியிருந்தால் அவள் என்னோடும் எதிர்த்துப் பேசுவாள்கோபித்துக் கொண்டு விட்டிட்டுப் போனால்....

வீடுகடன்பிள்ளைகள்... ஒருவரால் தனியாகச் சமாளிக்க முடியாதுவாயாலேதானே ஏதோ சொல்கிறாள்சொல்லிவிட்டுப் போகட்டும்வாடகை வீட்டில் இருக்கும்போது இருந்த நிம்மதி இப்போ எங்கே தொலைந்து போய்விட்டது?|

அப்போ மாலதிதான் கேட்டதற்கு அவன் பதில் கூறாது இருப்பது கண்டு சினம் தவழ,
'நான் விசரி மாதிரிக்கதைக்கிறன்நீங்கள் ஏதோ கனவு கண்டு கொண்டிருக்கிறீங்கள்.' என்றாள்.

'கனவு காணேல்லை...'

'அப்ப....?'

'ஏன் இந்த வீட்டை வாங்கினம் என்று நினைக்கிறன்.'

'நான் உங்கடை அக்காவைப் பற்றிக் கதைக்கிறன்நீங்கள் வீட்டை ஏன் வாங்கினம் என்கிறியள்... உங்களுக்கென்ன பைத்தியமே...?'

'அக்காவைப் பற்றிக் கதைக்க என்ன இருக்கு?'

'உங்கடை அக்காவாலைதானே இவ்;வளவு பிரச்சனையும்!'

'அக்காவாலை ஒரு பிரச்சனையுமில்லைஅளவுக்கு மீறிக் கடன்பட்டு இந்த வீடு வாங்கினதாலைதான் எல்லாப் பிரச்சனையும் இப்ப தலையிலை விழுந்திருக்கு!'

'உங்கடை அக்காவாலை... அவவுக்குக் காசு செலவழித்துக் கூப்பிட்டதாலைதான் பிரச்சனை வளர்ந்ததே தவிரவீட்டாலை இல்லை.'

'அக்கா தன்னை ஜேர்மனிக்குக் கூப்பிடு என்று கேட்டாவாகலியாணம் வேண்டுமென்று அழுதாவாநாங்கள்தான் அக்காவைக் கூப்பிடுவம்கல்யாணம் செய்து வைப்பம் என்று வெளிக்கிட்டனாங்கள்!'

'சரிநாங்கள்தான் கூப்பிட்டதென்றாலும் அவவுக்கு நல்லாய் இருக்க விதியில்லைவந்து குதித்த உடனேயே விதவையாகி விட்டாஇப்ப எங்கடை வீட்டுக்கை விடியாத மனிசியாக இருந்து கொண்டுமுழுப்பிரச்சனைகளுக்கும் காலாக இருக்கிறா.'

'மாலதிதேவையில்லாத கதை வேண்டாம்என்ன இருந்தாலும் எங்களைத் தூக்கி வளர்த்த அக்கா... தம்பியோடை யாரி பிடிக்கிறாய்அவனுடைய மனிசியோடை யாரி கட்டுகிறாய்;, இப்ப அக்காவோடையும்  தொடங்கிவிட்டாய்வேண்டாம் மாலதி!'

'நாங்கள் வேணுமோ... உங்கடை சகோதரங்கள் வேணுமோ என்று நீங்கள் தான் முடிவெடுக்க வேணும்.'

'இடதுகண் வேணுமாவலதுகண் வேணுமாஎன்று கேட்டால் எது வேணுமெண்டு பதில் சொல்லுறது?'

'எனக்கு அதைப்பற்றித் தெரியாதுஎன்னையும் பிள்ளைகளையும் தேவையென்றால் நான் சொல்லுறதைக் கேளுங்கோஇல்லாட்டி எங்கையென்றாலும் போங்கோஎன்னாலை சமாளிக்கமுடியும்.'

இப்படி மாலதி சொல்லக்கூடியவளென்று குமரனுக்கு ஏற்கனவே தெரியும்இதனால்தான் அவளுடன் வாதத்தை வளர்க்காமல்;, அவள் போக்கிலேயே விட்டிருந்தான்இன்று அக்கா பற்றி மாலதி அளவுக்கு மீறி அவதூறு கூறும் போதுஅவனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லைஎதிர்த்துக் கேட்டு விட்டான்.
அவள் என்னாலை முடியும்நீ போகலாமென்று சொல்லாமற் சொல்லிவிட்டாள்.

'என்ன பேசாமலிருக்கிறீங்கள்?'

'தம்பி என்னைவிட இரண்டு வயது இளையவன் என்றாலும் ஆள் கெட்டிக்காரன்.'

'ஏனப்பிடிச் சொல்லுறீங்கள்?'

'பூவிழி அவனுடைய சொல்லுக் கேட்கிறாளே...!'

'...! ...! அவவிட்டை வடிவு மட்டும்தான் இருக்குஎன்னட்டை அப்பாவின் சொத்து முழுக்கக் கிடக்குநான் யாருக்கும் அடங்கிப் போகவேணும் என்றில்லை.'

'நீ யாருக்கும் அடங்கிப் போக வேணுமென்று நான்சொல்லேல்லைநீ.. நீயாகவே இருஆனால் அடுத்தவன்  விசயத்திலை குறுக்கிடாதைநியாயத்தை ஒத்துக்கொள்!'

'நான் சொல்லுறது தான் நியாயம்இது அப்பா சொல்லித் தந்தது.'

'நல்லதுஅப்பாவுக்கு மகள் தப்பாமற் பிறந்திருக்கிறாய்வாழ்க!' என்று கூறி விவாதத்தை வளர்க்க விரும்பாதவனாய் சமாதானத்துக்கு வந்தான் குமரன்.




 7                

ஊரிலிருந்து மாலதியின் பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள்.
பேரப்பிள்ளைகளுடன் கதைக்க அவளது அம்மா ஆசைப்பட்டாள்.
அவர்கள் தமிழும் ஜேர்மன்மொழியும் கலந்து கதைக்கஅவர்களின் குரலைக் கேட்க முடிந்ததே தவிரஎன்ன சொல்கிறார்கள் என்பதை முழுதாகப் புரிந்துகொள்ள முடியவில்லைஅவள் அம்மாமாலதியோடு இதுபற்றிக் கூறிக் கவலைப்பட்டாஅவள் அப்பா தொலைபேசியை வாங்கி,
'எடி பிள்ளை,  என்ன இவங்கள் கச்சு முச்சென்று ஏதோ கதைக்கிறாங்கள்தமிழ் தெரியாதே...? உங்கை தானே தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் நிறைய இருக்கென்று கதைக்கினம்ஏன் பிள்ளைகளை அங்கை அனுப்பிப் படிப்பியன் பிள்ளைதமிழ் மொழி தெரியாமல் என்னெண்டு தமிழன் என்று சொல்லுறது...? படிப்பிவடிவாப் படிப்பி... காசு வேணுமென்றால் சொல்லுஅனுப்பிவிடுகிறன்தமிழன் எங்கை போனாலும் தலை நிமிர்ந்து வாழவேணும்மறந்து போகாதை!' என்று அவள் திருப்பிக் கதைக்க முடியாமற் சொல்லிவிட்டார்.

அவளது வீட்டில் அப்பா ஆதிக்கம்... அவர் சொன்னால் சொன்னதுதான்.
இவ்வளவு நாளும்சிவரஞ்சினி எத்தனையோ தடவைகள் தன்மையாக தமிழின் அவசியத்தை எடுத்துச் சொல்லியும் செவி சாய்க்காமலிருந்த மாலதிஇப்போ தகப்பன் சொன்னதும் அது பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.

8

ரமணன் கார் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் இருப்பது தெரிய வந்தது.
லொறி ஒன்றுகொழுவி இழுத்துக்கொண்டு வந்த பின்பெட்டி கழன்றுஎதிர்ப்பக்கத்திலிருந்து வந்த ரமணனின் காருடன் மோதியிருந்ததுபுத்தம்புது பென்ஸ்  பாவிக்க முடியாதபடி அடியுண்ட தகரடப்பா மாதிரி சளிந்து போய்கட்டி இழுக்கப்பட்டு கார்;க்கொம்பனிக்குக் கொண்டு போனதாயும் ரமணனும் கூட இருந்த மகன் விஸ்ணுவும் தெய்வாதீனமாகச் சிறுகாயங்களுடன் தப்பியதாயும் பார்த்தவர்கள் கூறியிருந்தார்கள்.

'வாபோய்ப் பார்த்திட்டு வருவம்;' மனம் பதறித் துடிக்கவெளிக்கிட்டவாறே மாலதியைப் பார்த்துக் கேட்டான்குமரன்.

'நான் வரேல்லைநீங்கள் வேணுமென்றால் போய்ப் பார்த்திட்டு வாங்கோ... உங்கடை செல்லத்தம்பியை......!'

 'கார் அடிபட்டு அவனும் குழந்தையும் ஆஸ்பத்திரியிலை இருக்குதுகள்எல்;லாச்சனமும் போய்ப் பார்த்திட்டு வந்திட்டுதுகள்அண்;;ணிக்காரி நீ வாமாட்டனென்று சொல்லாதைபோய்ப்பார்த்திட்டு வருவம்.'

'மச்சாள் போய் அவையின்ரை வீட்டிலை நிற்கிறாநீங்களும் போய் அங்கேயே படுங்கோ!'

தலையையாட்டித் தன் மனக்கசப்பைக் காட்டிய குமரன்தான் மட்டும் புறப்பட்டு நடந்தான்.

'அவரை விடக் கார் பெரிசு... அதோடை கண்விண் தெரியாமல் ஓடுகிறார்எங்கையாவது கொண்டு போய்ச் செருகுவார் என்று நினைச்சனான்.' மாலதி சொல்லிக் கொண்டே இருந்தாள்.

குமரன் பதில் சொல்லவில்லைகாரில் ஏறிப் புறப்பட்டான்.
                                                                

9

அன்று திங்கட்கிழமைநான்கு நாட்கள் விடுமுறை முடிந்துபள்ளி... வேலை என்று ஆரவாரம் தொடங்கியது.

குமரன் வேலைக்குப் போய்விட்டான்மாலதி பிள்ளைகளை எழுப்பிப் பாடசாலைக்குப் போக விடப் படாதபாடுபட்டுக் கொண்டிருந்தாள்.
சொல்வழி கேட்டால்தானேஒன்றுக்குப் பத்துத் தடவைகள் சொன்னாற்தான் அலுவல் நடக்கும்அவள் வழக்கமாக எட்டுமணிக்கு வேலைக்குப் போகசிவரஞ்சினி பிள்ளைகளின் அலுவல் பார்ப்பாள்அவள் ரமணன் வீட்டுக்குப் போனவள் இன்னும் திரும்பவில்லை.

கடிகாரம் துடித்துக் கொண்டிருந்தது.
|இந்த மனிசி ஒரு அறிவில்லாமல்;, தம்பியார் வீட்டிலை போய்ப் படுத்துக்கிடக்கு!| என்று மனதுக்குள் சிவரஞ்சினியை வைதபடிஅங்குமிங்குமாக அவசரப்பட்டுக் கொண்டிருந்தாள் மாலதி.

'அம்மாவீட்டுவேலை செய்ய மறந்து போனன்!' குறைப்பட்டான் நான்காம் வகுப்புப் படிக்கும் சமரன்.

அப்போஎன்று அழுது குளறிக்கொண்டு முதலாம் வகுப்புப் படிக்கும் ஜெயன் கண்ணீர் கொட்ட ஓடி வந்தான்.
'அக்கா அடிச்சுப் போட்டா...!'

'ஏனடி பிள்ளைக்கு அடிச்சனி...?'

'என்ரை பள்ளிக்கூடக்கொப்பியிலை படம் கீறி விளையாடி இருக்கிறான்அம்மா!' என்று சறோ ஒப்பாரி வைத்தாள்.

வீடே இரண்டுபட்டு நின்றது.
அப்போ கதவைத்திறந்து கொண்டு சிவரஞ்சினி வந்தாள்.
'ஏன் சத்தம் போடுறீங்கள்?'

'இதுகள் பிள்ளையள் என்றாலெல்லோ.... சீ.. என்னைக் கொன்று போட்டுத்தான் விடுங்கள்!' வேலைக்குப் போகும் அவசரத்தில் சினந்தாள் மாலதி.

சிவரஞ்சினி தான் கொண்டு வந்த உடுப்புகளை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டுஉடனே மருமக்களைப் பாடசாலைக்கு அனுப்பும் பணியில் இறங்கியபடி,
'நீங்கள் வேலைக்குப் போக ஆயத்தப்படுத்துங்கோ!' என்று மாலதியைப் பார்த்துச்சொல்லஅவளும் வெளிக்கிடச் சென்றாள்.

மருமக்களை வெளிக்கிடுத்தியபடிதேநீர் தயாரித்துபாண் பூசிசாப்பாடு ஆயத்தப்படுத்திகொண்டு போகவும் சாப்பாட்டுப் பெட்டிக்குள் வைத்து... எல்லா வேலைகளையும் மின்னல் வேகத்தில் செய்து முடித்தாள் சிவரஞ்;சினி.

வீட்டில் அமைதிநிலை மீண்டும் திரும்பியது.

பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல இறங்கினார்கள்.

|வானரங்கள்கொஞ்சநேரம் என்னைப்படுத்திவிட்ட பாடு!| என்று நினைத்தபடிசிவரஞ்;சினி பூசி வைத்திருந்த பாணைச் சாப்பிட்டுதேநீரையும்நின்ற நிலையிற் குடித்தபடி,
'மச்சாள்தமிழ்ப் பள்ளிக்கூடத்திலை பிள்;ளைகளைச் சேர்க்க யாரிட்டைக் கேட்கவேணும்?' கேட்டாள் மாலதி.

சிவரஞ்சினி ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

'யாரிட்டையாவது விசாரிச்சுப் பாருங்கோபிள்ளைகளைத் தமிழ் படிக்க விடலாமென்று நினைக்கிறன்;!'

சிவரஞ்சினியின் முகம் சந்தோசத்தால் மலர்ந்தது.

தாய்மொழியைத் தெரிந்திராதவன் எத்தனை பெரிய அறிஞன் என்றாலும் அவனும் ஒரு அறிவிலியே, |சொல்லி, |அம்மாசொல்லி, |ஆண்டவன்என்று சொல்லும் இனியமொழி எங்கள் தாய்மொழியாம் தமிழ்மொழிஉள்ளம் கொள்ளை கொள்ளும் ஊட்டம் மிகுந்தஎல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஏராளமான அறிவியற்பொக்கிசங்களைத் தன்னகத்தே கொண்டது எம்மொழிஇவற்றை ஐயம் அகலஒவ்வொன்றாய்ப் படித்து அறியதமிழ்மொழி தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ்மொழி காக்கஎத்தனை தமிழ் உயிர்கள் தாய் மண்ணில் அத்திவாரங்களாகிவிடுதலைக் கோபுரத்துக்கு உரமூட்டித் தோள் கொடுத்து நிற்கின்றன.
தமிழினத்தின் விடுதலைத்தீயில்அக்கினிப்பூக்களாகத் தங்கள் பிள்ளைகளைத் தந்துவிட்டுஎப்போ சமாதானம் மலரும்...? எப்போ ஒற்றுமை பிறக்கும்....? என்று விடியலை எதிர்பார்த்து நிற்கும் தாய்மார்களின் நெஞ்சத்தவிப்பு அவள் கண்முன் ஒரு கணம்தெரிந்தது.

|இங்கு வெளிநாட்டில் இவ்வளவும் இருந்தும் உயிர்மூச்சாம் தமிழ் மொழியைப் படிக்கமாட்டேன் என்ற பிள்ளைகளும் படிப்பிக்க முயற்சி எடுக்காத பெற்றோரும்எந்த இனத்தில் அடங்குவர்?| என்று சிவரஞ்சினி எண்ணிப் பார்த்தாள்

'என்ன மச்சாள் மௌனமாய் இருக்கிறீங்கள்...? பிள்ளைகளைத் தமிழ் படிக்கவிட என்னென்று சம்மதித்தன் என்று நினைக்கிறீங்கள் போலை...! அப்பா ரெலிபோனிலை எடுத்துப் பேசிப் போட்டார்பேரப்பிள்ளைகள் கதைக்கிறது விளங்கேல்லையாம்..., அதுதான் அப்பாவுக்காக விடப்போறன்.


மாமாவுக்கு மனதால் நன்றி சொன்; சிவரஞ்சினி,
'நான் விசாரிச்சுப்பள்ளிக்கூடத்திலை சேர்;த்துவிடுகிறன்அதிலை ஒரு கஸ்டமுமில்லைநீங்கள் வேலைக்குப் போட்டு வாங்கோ!' என்று உற்சாகமாக விடை கொடுத்தாள்.

சிவரஞ்சினி வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள்பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு வந்து சேர்வதற்குள் கழட்டிப் போட்ட உடுப்புகளிலிருந்து... விளையாட்டுச் சாமான்கள்;, தேநீர் குடித்த பாத்திரங்கள்;, தோய்த்து உலர்ந்த உடுப்புகள் என்று ஆங்காங்கே சிதறிக் கிடந்தவற்றைச் சீர்படுத்திஒழுங்கு செய்துவீட்டையும் கூட்;டிவிட்டுச் சமைக்க வேண்டும்.  

இது கட்டாய வேலையல்லஅவளாகவே முன்வந்து மனச்சந்தோசத்துடன் செய்யும் வேலைகள்.


10

தொலைபேசி மணி அடித்தது.
மடித்த உடுப்புகளை விட்டுவிட்டுத் தொலைபேசியை எடுத்து, 'ஹலோ!' என்று குரல் கொடுத்தாள்.

'சுகுமாரன் கதைக்கிறன்!'

'எந்த சுகுமாரன்?'

மறுமுனையில் சிறு மௌனம்.
'ஹலோஹலோ!' என்று சிவரஞ்சினி குரல் கொடுத்தாள்.

'மறந்து போயிருக்க மாட்டீங்கள் என்று நினைச்சன்!'

'எனக்கு ஞாபகம் வரேல்லைசொல்லுங்கோ!' என்றவள்;, |சுகுமாரன்...| என்று உச்சரித்துப் பார்த்தாள்நினைவுக்கு வந்து விட்டதுதன் வாயைக் கையாற் பொத்தினாள்.
அவளைப் பெண் பார்க்க வந்தவர், |இவர் ஏன் ரெலிபோன் எடுக்கிறார்?| என்ற கேள்வி  மனதில் எழுந்ததுநெஞ்சு வேறு |படபடஎன்று தன்னையறியாமல் அடித்தது.

'மன்னிச்சுக் கொள்ளுங்கோஎன்னை நீங்கள் நினைவிலை வைச்சிருக்க நான் என்ன விடுதலை வீரனே...? தியாகியே...? சுயநலம் பிடித்த ஒரு சராசரி மனிதன்...' என்று சுகுமாரன் நிறுத்தினான்.

'நினைவிருக்கு!' சிவரஞ்சினி ஒரு சொல்லில் சுருக்கமாகப் பதில் கொடுத்தாள்.

'எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு!'

'எதுக்காகச் சொல்லுறீங்கள்?'

'வடிவா இருக்கிறீங்கள்;, முற்போக்கு எண்ணங்கள் கொண்டனீங்கள்நல்ல அறிவு இருக்கென்றும்  உங்களுடைய பேச்சிலிருந்து தெரிந்து கொண்டன்...!'

சிவரஞ்சினிக்கு என்ன பேசுவதென்று தெரியவில்லை. |பொம்பிளை பார்க்க வந்த மனிசன் காசுப்பிரச்சனையில் குழப்பிக்கொண்டு போயிட்டுரெலிபோன் எடுத்து இப்பிடிக் கதைத்தால்...| அவள் நசுக்காகப் பேச்சை முடிக்க விரும்பினாள்.

'தம்பியவை வீட்டிலை இல்லைபின்னேரம் நிற்பினம்எடுங்கோ!'

'நான் உங்களோடை கதைக்கத்தான் எடுத்தனான்அண்டைக்கு நடந்ததுக்கு மன்னிப்புக் கேட்க வேணும் போலை இருந்தது.'

அவள் பதில்சொல்லவில்லை.

'நான் சொன்னது கேட்;டதா?'

'கேட்டது!'

'மன்னிச்சிட்டன் என்று சொல்லுங்கோவன்!'

சுகுமாரின் குரலில் கெஞ்சும் தொனி ஒலித்ததுசிவரஞ்சினிக்குச் சிரிப்புத்தான் வந்தது. |இவரை நான் ஏன் மன்னிக்க வேணும்இவர் ஏன் மன்னிப்புக் கேட்கிறார்...?| என்று அவள் மனதில் கேள்விகள் எழுந்தன.

'நான் ஏன் உங்களை மன்னிக்கவேணும்?'

'என்ரை மனம் பிழை விட்டதாகச் சொல்லுதுகலியாணம் பேச வந்துகாசு கேட்டு... காசுக்குத்தான் கலியாணம் என்ற மாதிரி நடந்து கொண்டம்இது தப்பில்லையா...?'

'நீங்கள் செய்தது தப்பு... தப்பில்லை என்;றதை முடிவு செய்ய நான் ஒன்றும் நீதிபதி இல்லை.'

'ரெலிபோனிலை உங்களோடு கதைத்து என்;ரை மனதிலை உள்ளதை விளங்க வைக்க முடியாதுநேரிலை சந்தித்தால் தான் உங்களுக்குப் புரியும்எப்ப சந்திக்கலாம்...?'

'நான் உங்களுக்கு முதலே சொல்லிப் போட்டன்என்ன என்றாலும்  தம்பியோடை கதைத்துக் கொள்ளுங்கோ.. கோபிக்க வேண்டாம்!'

சுகுமாரன் இடையே குறுக்கிடச் சந்தர்ப்பம் வைக்காது கதையை முடித்துதொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு, 'அப்பாடா...!' என்று சிவரஞ்சினி பெருமூச்சு விட்டாள்.


   11                            

மாலை.....

சிவரஞ்சினி ரமணன் வீட்டுக்குப் போக ஆயத்தமானாள்அவன் இன்னும் வைத்தியசாலையில் இருப்பதால்பூவிழிக்கும் பிள்ளைக்கும்  துணையாகவும் மனஆறுதலாகவும் இருக்கும்  என்று சிவரஞ்சினி நினைத்தாள்இது மாலதிக்கு விளங்க வில்லை.
|இவ ஏன் அங்கை ஓடியோடிப் போறா....?| அவளுக்குப் பிடிக்க வில்;லை.

சிவரஞ்சினி ரமணன் வீட்டுக்குச் செல்வதறிந்த குமரன், |அக்கா பஸ் ஏறிமிச்சத்தூரம் வேறை நடந்து போக வேண்டியிருக்கும்என்ற இரக்கத்தில்;,
'வாங்கோ அக்காநான் காரிலை கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்!' என்று புறப்பட்டான்.

'நீங்கள் எங்கை போறீங்கள்?' கேள்விக்கணை செவிப்பறையைப் பிரிக்ககுமரன் நின்று திரும்பினான்முன்னால் சிவரஞ்சினி காரை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

'எனக்குக் கார் வேணும்;!' சொன்னாள் மாலதி.

'அக்காவைக் கொண்டு போய் விட்டிட்டு, |டக்;| என்று வாறன்இல்லாட்டி நீயும் வாவன்!'

'எனக்குக் கார் தேவைநீங்கள் வேணுமெண்டால் ரக்;ஸி பிடிச்சுப் போங்கோ!'

'லைசன்;ஸ் எடுக்க விட்டதுக்கு இதுவும் சொல்லுவாய்இன்னமும்  சொல்லுவாய்!'

'ஏன்;, நான் உங்கடை காசிலையே லைசன்ஸ் எடுத்தனான்உழைச்சன்படிச்சன்எடுத்தன்நான் அடுப்பூதும் பொம்பிளை இல்லைபாரதி பாடிய புதுமைப்பெண்....!'

'என்ன புதுமைப்பெண்ணோ நீ....! வாற கோவத்துக்கு காரை அடிச்சு நொருக்கிக் கொழுத்திப் போடுவன்!'


'என்ன... கொழுத்தி எரிச்சுப் போடுவியளோ...? ஒரு ரெலிபோன் அடியோடை பொலிஸ்வான் கூவிக்கொண்டு வந்து நிற்கும்விசர் பிடிச்சுப்போட்டுது என்று ஆஸ்பத்திரியிலை சங்கிலி போட்டுப் பூட்டி வைப்பாங்கள்அப்ப தெரியும்....!'

அப்போ சிவரஞ்சினி குறுக்கிட்டு,
'எனக்காக நீங்கள் சண்டை போட வேண்டாம்நான் பஸ்ஸிலை  போறன்!' என்று கூறிவிட்டுப் பதிலையும் எதிர்பார்க்காமல் கவலையோடு நடந்தாள்.

குமரன் காரின் திறப்பை மேசையில் எறிந்துவிட்டுவெளி முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் போய்சிறைப்பட்ட கைதி போல உட்கார்ந்திருந்தான்.


12



சிவரஞ்சினி தமிழ்ப்பள்ளிக்கூடம் பற்றி விசாரித்தபோதுதொண்டர்;தான் இதற்குப் பொறுப்புஅவரைக் கேட்டால் எல்லாம் சொல்லுவார் என்பது தெரிய வரஅவள் அவரின் தொலைபேசி எண்களை வாங்கி அவரோடு கதைத்தாள்.

அன்றொரு நாள் காரில் சந்தித்ததை இருவருமே நினைத்துக் கொண்டார்கள்.

தொண்டர் தொலைபேசியில்வாரத்தில் ஒரு முறை நடைபெறும் சிறார்களுக்கான தமிழ் வகுப்புப்பற்றி சிவரஞ்சினிக்கு வேண்டிய விபரங்களைக் கூறிஅடுத்து நடைபெறும் வகுப்புக்குப் பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு வரும்படியும் கூறினார்.

இதுபற்றி சிவரஞ்சினி தம்பி குமரனிடம் சொன்னாள்.
'முதல்நாள் நீ கூட்டிக்கொண்டு போய்க் கதைத்துவிட்டிட்டு வாஅதுதான் நல்லது... பிறகு நான் பார்த்துக் கொள்ளுறன்.'

'தொண்டரோடை நான் கதைக்கிறேல்லைநீங்களே போட்டு வாங்கோ அக்கா!' என்றான் குமரன்.

'ஏன் கதைக்கிறேல்லை...? இப்பிடியான மனிசரோடை சிநேகிதம் வைச்சிருந்தால் நீ குறைஞ்சே போயிடுவாய்;...!' கேட்டாள் அக்கா.

'அப்பிடி ஒன்றுமில்லை!'

'அக்காசொன்னால் கேளுங்கோவன்வருசக்கணக்கா அந்தாளோடை கதைக்கிறேல்லைஇப்ப போய்க் கதைக்கட்டே?' 

'இது பொதுவிசயம் தம்பிதொண்டர் நல்ல மனிசன்வாவேணுமென்றால் நானும் வாறன்.'

'சரி வாறன்நீங்கள் கதைக்கவேணும்நான் காருக்குள்  இருப்பன்.'

இதற்கு மேல் அவள் குமரனை வற்புறுத்தவில்லை.


13

தமிழ்ப் பள்ளிக்கூடம், தேவாலயம் தொடர்பான பொதுநிறுவனம் ஒன்றில் அனுமதி பெற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அது ஒரு பெரிய கட்டடம்பல்வேறு பொதுப்பணிகளுக்கும் இடமளிக்கும் அந்த இடத்தில் வாரத்தில் ஒரு நாள் சிலமணி நேரங்கள் தமிழ்ச்சிறார்கள்  தங்கள் தாய்மொழி கற்க வகுப்புகள் ஒழுங்காக நிகழ்ந்து வந்தன.

ஒவ்வொருவகுப்புக்கும் தனித்தனி ஆசிரியர்கள் தமிழ்மொழியைக்   கற்பித்தார்கள்ஜேர்மனி பூராவும் நடைபெற்று வரும் தமிழாலயங் களில் ஒன்றாக இப்பாடசாலையும் விளங்கியதுஇதன் நிர்வாகி யாக தொண்டர் கடமையாற்றி வந்;தார்.

தமிழன் உலகின் எம்மூலையில் இருந்தாலும் தன் தாய்;மொழியை யும்  தன் உயர்ந்த பண்பாடுகளையும் கட்டிக் காப்பான் என்பதற்கு கட்டியம் கூறுவது போல அந்தத் தமிழ்ப்பாடசாலை விளங்கியது.

தொண்டருடன் கதைத்துப் பிள்ளைகளை அங்கு படிக்கச் சேர்த்துவிட்டு சிவரஞ்சனி திரும்பினாள்பிள்ளைகளை வீட்டுக்கு மீண்டும் கூட்டிப்போக குமரன் திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாமல்தொண்டர் தான் போகும்;வழி என்பதால்அவர்களைத் தன் காரில் ஏற்றி வருவதாகக் கூறிவிட்டார்.

பாடசாலை ஆரம்பமாகுமுன்அந்தக் குறுகிய வேளையில் அங்குமிங்கும் ஓடியோடிப் பல அலுவல்களைக் கவனித்த தொண்டரின் தோற்றம்திரும்பிப் போய்க்கொண்டிருந்த சிவரஞ்சினியின் மனதில் அடிக்கடி மின்னியது.

உயர்ந்த கட்டுப்கோப்பான தோற்றம்வெள்ளைமுடிகள் சிறிதாக தலையெடுத்த போதும் அவற்றை மை பூசி ஒழிக்க விரும்பாத உள்ளம்ஒழுங்கான முகச்சவரம்அமைதியான நடைஅறிவு ஒளிக்கும் கண்களுக்கு அழகு மின்ன ஒரு கண்ணாடி....

பார்த்தால் இன்னொருதடவை பார்க்க வேண்டுமென்று தூண்டும்அந்த மனிதரைச் சந்தித்ததே ஒரு சந்தோசமாக சிவரஞ்சினியின்மனம் துள்ளியது.

கார் நிறுத்தும் இடத்துக்கு வந்து காரின் கதவைத் திறக்கஉள்ளே றேடியோ பாடிக் கொண்டிருந்ததுசோம்பலில் தூங்கிப் போன குமரன் திடுக்கிட்டு விழித்தான்.

|ஒருவன் தூங்குகிறான்,
இன்னொருவன் விழித்திருக்கிறான்,
உலகம் சுழல்கிறதுஎன்று சிவரஞ்சினியின் நா இரகசியமாக உச்சரித்தது.

 14 


ரமணன் குணமாகி வீட்டுக்கு வந்துவிட்டான்அவனைப் பார்க்கக் குமரன்சிவரஞ்சினி இருவரும் வந்திருந்தனர்மாலதி,
'மதியாதார் முற்றம் மிதியாதேஎன்று எங்கடை அப்பா சொல்லி இருக்கிறார்உங்களுக்கு முதுகெலும்பு இல்லைபோறீங்கள்எனக்கு அது இருக்கு.. நான் வரமாட்டன்.' என்று மறுத்து விட்டாள்.

ரமணன் ஹோலுக்குள் இருந்த சோபாவில் நீட்டிநிமிர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்பூவிழிஅவர்களை வரவேற்றுதேநீர் கொடுத்து உபசரித்தாள்.

உடல்நலம் விசாரித்துஉலக உதைபந்தாட்டப் புதினங்களும் உரையாடிக் கொண்டிருந்தார்கள்சிறுவன் விஸ்ணு பலூன் ஒன்றை வைத்துக் காலால் அடிப்பதும் தலையால் அடிப்பதுமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

'தமிழ்ப்பள்ளிக்கூட அரையாண்டுச்;சோதனையில் ஒன்று எடுத்து இருக்கிறன் என்று பெரியப்பாவுக்குச் சொன்னனியே?' பூவிழி மகனைப் பார்த்துக் கேட்டாள்.

'ம்...ம்...!' என்றான் அவன்.

'சொல்லுவராட்டிலும் போகாட்டிலும் இவர் உன்ரை பெரியப்பாசொல்லு...!' என்று பூவிழி மகனைத் தெண்டித்தாள்.

'பெரியப்பாநான் தமிழிலை ஒன்று எடுத்தனான்ரீச்சர் என்னைக் கெட்டடிக்காரன் என்று சொன்னவ.' என்று நல்ல தமிழிலே சொல்லிவிட்டுபலூனைத் தேடினான்.

'விஸ்ணு நேசறிக்குப் போகும்போதே தமிழாலயத்துக்கும் போகத் தொடங்கிவிட்டான்இப்போ வளர்நிலை இரண்டுதமிழை நன்றாகப் பேசவும் வாசிக்கவும் எழுதவும் அவனால் முடியும்.'

'பிள்ளைக்கு என்ன வேணும்பெரியப்பா நாளைக்கு வாங்கித் தாறன்.' விஸ்ணுவைக் கிட்ட அணைத்துத் தடவியபடி கேட்டான் குமரன்.
அவன் தாயைப் பார்த்தான்.
பூவிழிக்கு விளங்கிவிட்டதுமகன் கொஞ்சநாட்களாக சில்லுப் பூட்டிய சப்பாத்து வேண்டுமென்று கேட்டுக் கொண்டே இருக்கிறான்அயல்வீட்டுப்பிள்ளைகள் அந்தச் சப்பாத்தைப் போட்டுக்கொண்டு ஓடித்திரியும்போது இவனுக்கும் ஆசையாக இருந்தது.


பூவிழி தலையையாட்டி, 'வேண்டாம்என்று சொல்லஅவன் தன் விளையாட்டைத் தொடர்ந்தான்.

'கேளடா விஸ்ணுபெரியப்பா பிள்ளைக்கு வாங்கித் தருவார்.' சொன்னாள் மாமி சிவரஞ்சினி.

மீண்டும் தாயைப் பார்த்துவிட்டு,
'இன்லைனர் வேணும்.' என்றான் அவன்.

'பெரியப்பாபெரியம்மா எங்கடை வீட்டுக்கு வந்து போனாலே எங்களுக்குச் சந்தோசம்!' சொன்னாள் பூவிழி.


'இன்லைனர் நிறையக் காசு வரும்நீ பெரியப்பாட்டை பந்து இல்லாட்டி பென்சிற்பெட்டி வாங்கித் தரச்சொல்லிக் கேள்!' சொன்;னாள் சிவரஞ்சினி.

இங்கே தம்பிவீட்டில் சரி என்று சொல்லிவிட்டுஅங்கே இதனால் மாலதிக்கு விளக்கம் சொல்ல முடியாமல் குமரன் திணறப்போவதை நினைத்துஅந்த வீண்விவாதம் அநாவசியம் என்பதால்  அவள் அப்படிச் சொன்னாள்.

'சீ..... நான் பிள்ளைக்கு வாங்கித்தாறன்!' உறுதிப்படுத்தினான் குமரன்.

சிவரஞ்சினி சொன்னாள்,
'நான் இங்கை இன்னும் எத்தனை நாளுக்கு இருக்கிறனோ தெரியாதுநீங்கள் அண்ணையும் தம்பியும் ஒற்றுமையாக இருக்க வேணும்அடே... ஒரு தாயின் வயிற்றிலை பிறந்திட்டுஏனடா நீங்கள் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறீங்கள்?'

'அக்காஇந்தக் கதையை இப்ப ஏன் எடுக்கிறீங்கள்அண்ணை என்னை வருத்தம் பார்க்க வந்ததே எனக்குச் சந்தோசம்... நீங்கள்அவரைக் குழப்பாதேங்கோ!' கெஞ்சுவது போலக் கேட்டுக் கொண்டான் ரமணன்.

'நான் சொல்லுறதைக் கேளுங்கோகாரணமில்லாமல் கோவிக்கிற ஆட்கள் இங்கை நிறையப்பேர் இருக்கினம்... ஆனால்சகோதரங்கள் குற்றம் குறை இருந்தாலும்விட்டுக் கொடுத்து வாழ வேணும்.
எனக்கு உங்களாலை சரியான கவலையடாஊரிலை சந்தோசமாக இருந்த என்னைஇங்கை கூப்பிட்டு விட்டிட்டு நீங்;கள் உங்களுக்குள்ளை பிடுங்குப்பட்டுக் கொண்டிருக்கிறீங்கள்;.

வீடு வாங்குகிறது... கார் வாங்குகிறதுகடன் அடைப்பதுக்கு இரண்டுமூன்று வேலை என்று பறந்து திரியிறீங்கள்உங்களுக்குப் புதுப்புதுப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே போகின்றனநான் என்ன செய்யிறது....? சொல்லுங்கோ!

உங்களிட்டை நான் ஒன்றும் கேட்கேல்லைஒற்றுமையாக இருங்கோடா... இதைத்தான் கேட்கிறன்!' என்றவள் பூவிழியைப் பார்த்து,
'நான் சொல்லுறது பிழையா?' என்று கேட்டாள்.

'சரி மச்சாள்ஆனால் மாலதியக்காவோடை ஒற்றுமையாக இருக்க முடியாது.

'மாலதி அப்பிடித்தான்,  அவ ஒருநாளைக்குத் திருந்துவாஅதுக்காக நீங்களும் சண்டை பிடித்துக்கொண்டு நிற்கப் போறீங்களே?'

'மச்சாள்கோவிக்காதேங்கோஅவ எங்களை மதிக்கிறதே இல்லைவலுச்சண்டைக்கு இழுப்பாதான் பெரிசு... தன்ரை குடும்பம் பெரிசு... ஏதோ எலிசபேத் மகாராணி என்ற தலைக்கனம்;. அவவோடை என்னண்டு ஒற்றுமையாகப் பழகிறது?'

'நீர் பேசாமல் இரும்அவ என்ன செய்வாகத்திப்போட்டுக் கிடப்பா!' என்றாள் சிவரஞ்சினி.

'என்ன மச்சாள் சொல்லுறீங்கள்நீங்கள் என்றால் விடுவீங்களோஅவவுக்கு இருக்கிற வாய் எங்களுக்கு இல்லையோ?'

'வாய் இருக்கிறதுஇனிமையான நன்மை தரும் வார்த்தைகளைப் பேச என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்நீ பெரிசு... நான் பெரிசென்று நாக்கை நெளித்து வாய்ப்போர் நடத்தவல்ல.'

'எங்களுக்குச் சொல்லுறதைமச்சாள் நீங்கள்மாலதிக்கும் சொல்லுங்கோஅவவாலைதான் பிரச்சனை வருகிறதே தவிர,  எங்களாலை இல்லை.'

'உங்களாலை இல்லை... சரிஇன்றைக்கு நான் சொல்லுறன்அண்ணையும் தம்பியும் தங்களுக்கை ஏதும் பிரச்சனை என்றால் கதைச்சுத் தீர்த்துக் கொள்ளட்டும்நீரும் மாலதியும் அவை யின்;ரை பிரச்சனைக்கை தலையிடாதேங்கோ!'

பூவிழி திருப்பிக் கதைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தாள்சிவரஞ்சினியின் மனோநிலை அவளுக்குப் புரிந்தது.
தம்பிமார் இருவரையும் பார்த்துசிவரஞ்சினி மேலும் சொன்னாள்.
'எனக்குக் கலியாணம் செய்து வைக்க வேணும்சீதனம் கொடுக்கவேணும் என்று நீங்கள் எனக்காகச் சண்டை பிடிக்க வேண்டாம்அது ஒரு முடிந்த கதையாக இருக்கட்;டும்.
என்னைக் கூப்பிட்ட காசு நான் தருவதாகச் சொல்லியிருக்கிறன்தருவன்அதுக்காகவும் நீங்கள் வாக்குவாதப்படத் தேவை இல்லைஅண்ணன்தம்பிக்கை என்னடா போட்டிபொறாமை?'

'நாங்கள் போட்டிபொறாமைப்படவில்லை!' சொன்னான் ரமணன்.

குமரன் மௌனமாக இருந்தான்.
'நீ மூத்தவன்வாயை மூடிக்கொண்டிருந்தால் என்னடா அர்த்தம்?'

'நான் என்ன செய்ய...? உங்களுக்கு மாலதியின் குணம் தெரியும் தானேஇப்ப நான் இங்கை வந்து இவ்வளவு நேரம் நிற்கிறதுக்கே அவ என்ன போடு போடுவா என்று யோசிக்கிறன்.'

'டேய்நீ பிறந்தபோது ஆம்பிளைப்பிள்ளை பிறந்திருக்கிறான் என்று கூரை தட்டிச் சந்தோசப்பட்டினம்நீ என்னடா இப்ப மனிசிக்குப் பயந்து குலை நடுங்கிக்கொண்டிருக்கிறாய்?'

'பயந்து கொண்டிருக்கேல்லைவீட்டுக்கை ஏன் ஓயாமற் சண்டை என்று பேசாமலிருக்கிறன்.'

'தம்பிநியாயம் என்று ஒன்றிருக்குஒராள் உரத்துப் பேசுறார் என்றதுக்காக ஓதுங்கிப் போக முடியாதுஒரு குடும்பத்திலை கணவன்மனைவி இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள வேணும்போகடி போக்கிலை வாழ்வதெல்லாம் வாழ்க்கையாகாது.
ஒருவரின் உரிமையை மற்றவர் முழுதாக விழுங்கி அபகரித்துக் கொள்வது மனிதத்தன்மையும் ஆகாதுஇதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பது பாசமும் ஆகாது.'
சிவரஞ்சினியின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தைகள் வரவில்லை.

சிறு மௌனம் நிலவியது.
அதனை விஸ்ணுவின் அழுகை கலைத்துஎல்லோர் கவனத்தையும் அவன் பக்கம் திருப்பியது.
பலூன் உடைந்த சோகத்தில் அவன் அழுதான்.
சிவரஞ்சினி அவனைக் கட்டிப்பிடித்துச் சமாதானம் சொன்னாள்.

பூவிழிவிஸ்ணுவின் அறைக்குள்ளிருந்து வேறு பலூன் எடுத்து வரஅதனை  குமரன் வாங்கி ஊதிமுடிந்து கொடுக்க அவனது அழுகை நின்றது.

குழந்தைப்பருவம் எவ்வளவு இனிமையானதுசிறு கவலை வந்தாலும் ஓவென்று அழுதுவிட்டுசில நிமிடங்களில் மறந்து போய் வேறு விடயத்தில் மனதைத் திருப்பி மகிழ்ந்து கொள்ளும் தன்மைஅழுகையைப் போக்ககேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்க அப்பாஅம்மா இருக்கிறார்கள்.படிக்கிற நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் விளையாடித் திரியலாம்.
எவ்வளவு நல்ல பிராயம் இதுஇதைத் தாண்டினால் வாழ்க்கை ஒரு போர்க்களமாகி விடுகிறதுசில சமயம் வெற்றிஉயர்வுமகிழ்ச்சி என்று கொண்டாட்டம்.
அது தவறினால்தோல்விவீழ்ச்சிசோகம் என்று அழுகை.
|குழந்தையாகவே இருந்திருக்கக்கூடாதா...!| ஏங்கியது சிவரஞ்சினி யின் உள்ளம்.

குமரன்நேரத்தைப் பார்த்தான்.
சிவரஞ்சினி விளங்கிக் கொண்டாள்.
'போயிட்டு வாறம்!' என்று விடைபெற்றார்கள்.


15 

தொலைபேசிமணி அடித்தது.
சிவரஞ்சினி அதை எடுத்து, 'ஹலோ!' என்று குரல் கொடுத்தாள்.

'சுகமாக இருக்கிறீங்களா?' மறுமுனையில் இருந்து கேள்வி வந்தது.

'யார் கதைக்கிறீங்கள்?'

'அதுசரிதான்உங்களுக்கு எங்கை என் ஞாபகம் வரப்போகுது?'

'ரெலிபோனிலை குரல் மட்டும்தான் வரும்ஒரு நாள் இரண்டுநாள் பழகிய குரல்களையெல்லாம் கண்டறியுமளவுக்கு நான்  பாண்டித்தியம் பெற்றவளில்லை.' என்று குத்தலாகப் பதில்பகர்ந்த சிவரஞ்சினிக்குகதைப்பது தன்னைப் பெண்பார்க்க வந்த மாப்பிள்ளை என்பது விளங்கிவிட்டது.

'உங்களுக்கு நல்ல குரல்!'

'பெயர் சொல்லாட்டி என்னாலை தொடர்ந்து கதைக்க முடியாதுபோனை வைக்கிறன்கோபிக்கவேண்டாம்.' என்று சிவரஞ்சினி சொல்ல,
அவசரமாக, 'பிளீஸ் வைக்காதேங்கோநான் சுகு கதைக்கிறன்உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும்  என்று நிறுத்தினான் அவன்.

'நான் யாரோநீங்கள் யாரோ.  என்னோடை என்ன கதைக்கப் போறீங்கள்ஏதாவது கதைக்கிறதென்றால் தம்பியவை நிற்கும் போது எடுங்கோ!'

'உங்களோடை நான் தனியாக் கதைக்க வேணும்.'

'தனியாக் கதைக்கிறதுக்கு எந்தத் தேவையுமில்லையே!'

'உங்களோடை கதைத்தால் என்ரை மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கு!'

'உங்களுக்குத் தான் அக்காஅத்தான்சொந்தக்காரர்... என்று நிறையப்பேர் இருக்கினம்அவையோடை கதைத்து ஆறுதல் அடையிறத்தை விட்டிட்டுயாரோ ஒருத்தி என்னோடை கதைத்து எப்பிடி மனம் ஆறப் போறீங்கள்?'
தொலைபேசியை வைக்கவும் முடியாமல்தொடர்ந்து கதைக்கவும் விரும்பாமல் என்ன செய்வதென்று திணறினாள் சிவரஞ்சினி.

'உங்கள் குரலைக் கேட்டாலே நிம்மதி வருகுது!'

|இவர் நிம்மதியடையுமளவுக்கு என்  குரலில் அப்படி என்ன இருக்கு?| என்று நினைத்தாள் சிவரஞ்சினிஆனால் சொல்லவில்லை.

சுகுமாரன் தொடர்ந்து சொன்னான்.
'என்ரை சகோதரங்கள் தங்களுக்குப் பிரச்சனை என்றால் சொல்லுவினம்;, உதவி செய் என்று ஒரே பிடியாக நிற்பினம்;, நீ தான் எங்கடை சதோதரம் என்பினம்ஆனால் என்ரை பிரச்சனைமனக்கஸ்டங்களைச் சொல்லி மனம் ஆற யாருமே இல்லைவெளிநாட்டிலை தனியா இருக்கிறது எவ்வளவு கஸ்டம்.. என்ன சொல்லுறீங்கள்....?'

'நீங்கள் மிஸ்டர் சுகுமாரன் தனியா இல்லையேஉங்களுக்கு அக்காஅத்தான்மருமக்கள் எல்லாரும் இருக்கினம்;... பிறகேன் தனிய என்று பிரித்துச் சொல்லுறீங்கள்?'

'இன்னும் நீங்கள் என்னை மிஸ்டர் போட்டா கூப்பிட வேண்டும்சுகு என்றே சொல்லலாம்அது நெருக்கமாக இருக்கும் இல்லையா?'

|நெருக்கமாக இருக்குமாம்;| என்ன அர்த்தத்தில் இந்த ஆள் இப்பிடிச் சொல்லுது என்று மண்டையைப் போட்டு உடைத்தாள் சிவரஞ்சினி.

'என்ரை கலியாணவிடயத்திலை எங்கடை வீட்டார் சீதனம் எத்தனை இலட்சம் வருமென்று பார்க்கினமே தவிரஎன்ரை வாழ்க்கையைப் பற்றி எள்ளளவேனும் நினைச்சுப் பார்க்க மாட்டினமாம்.'

சுகுமாரன் தன் மனக்கஸ்டங்களை வெளிப்படையாகவே சொன்னான்.
|பாவம்என்று மனதுக்குள் நினைத்த சிவரஞ்சினி இதற்கு ஒரு ஆறுதல் வார்த்தையாவது கூறாவிட்டால் மனதில் ஈரமே இல்லை என்றாகிவிடும் என்ற உணர்வில்,
'நீங்கள் நல்லவராக இருக்கிறீங்கள்உங்கள் அறிவையும் கொஞ்சம் பாவித்து நடக்கலாம்தானேஉங்கள் சகோதரங்கள்உங்கடை நன்மையைப் பற்றிச் சிந்திக்காமல்தங்களுக்கென்று வாழத் துடிக்கும்போதுநீங்களும் உங்களுக்கென்றொரு முடிவு எடுக்கலாம்தானேஇதில் தப்பில்லையே.
அதோடை உங்கடை அக்காதங்கச்சிக்கு என்று நீங்கள் பட்ட கடனை அடைக்கநீங்கள் சீதனத்தோடை பெண் பார்க்கும் போதுஇன்னொருவரைக் கடனாளியாக்குகிறீங்கள்அவளோடை அண்ணனோதம்பியோ அல்லது பெற்ற தாய்தகப்பனோ இரவுபகலாக நாரி தேய உழைத்துஇல்லாட்டிக் கடன்பட்டுத் தான் அந்தச் சீதனத்தை உங்களுக்குத் தர வேண்டியிருக்குமூளை இருக்கிறவர்களுக்கு இதை விளங்கிக் கொள்ள அதிக நேரம் தேவையில்லை.' என்று ஆலோசனையுடன் அறிவுரையும் கூறினாள்.



அப்போ சுகுமாரன்,
'இன்னொரு தரம் உங்கடை வீட்டுக்குப் பெண் பார்க்க வரலாமென்று யோசிக்கிறன்!' என்றான்.

'வருவதாலை பெரிய மாற்றம் ஏற்படுமென்று நான் நினைக்; வில்லைஒருவரை ஒரே பார்வையில் எடை போடக் கூடியவர்களும் இருக்கிறார்கள்ஆயிரம் தடவைகள் பார்த்தாலும் அவர்களைப் பற்றி எடை போட முடியாதவர்களும் இருக்கிறார்கள்.'

'ஏனப்பிடிச் சொல்லுறீங்கள்?' விளக்கத்தை எதிர்பார்த்தான் சுகுமாரன்;.

'ஆறுதலாக யோசித்துப் பாருங்கோ!' சுருக்கமாகச் சொன்னாள் சிவரஞ்சினி.

'நான் என்ன சொல்ல விரும்புறன் என்று உங்களுக்கு விளங்குதா?'

'விளங்குது.'

'அப்ப நேரடியாகவே பதிலைச் சொல்லுங்கோவன்!'

'சில விடயங்களுக்கு நேரடியாப் பதில் சொல்ல முடியாது.'

'ஏன்...?'

'மனிதநேயம்முன்னுக்கு நிற்பவரின் முகம் முறியப் பதில் சொல்வது தமிழ்ப் பண்பாகாது.'

தொலைபேசியில் கதைத்து முடித்துவிட்டுதன் வேலைகளைக் கவனித்த சிவரஞ்சினியின் மனம் சுகுமாருடன் தான் அப்படிக் கதைத்தது சரியாதவறா என்று குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது.

16

 ரமணன் சுகயீனலீவில் இன்னும் வீட்டில் இருந்தான்விபத்தில் ஏற்பட்ட கால்நோ இன்னும் முற்றாகக்குணமாகவில்லை.
சோபாவில் காலை நீட்டிவானோலியைக் கேட்டவாறு படுத்து இருந்தான்வானொலியில் ஒரு நாடகம்  ஒலித்துக் கொண்டு இருந்ததுசகோதரங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளைக் கருவாகக் கொண்டிருந்தது அந்தநாடகம்.

அண்ணனும் தம்பியும் வாக்குவாதப்படுவதும் அண்ணியைத் தம்பி மரியாதையின்றி வாய்க்கு வந்தபடி ஏசுவதும்;... இருவரின் மனைவியரும் தொலைபேசியில் மாறிமாறிப் பிணக்குப்பட்டுப் பிடுங்குப் படுவதும் நண்பர்களுடன் ஒருவரைப்பற்றி ஒருவர் இல்லாததும் பொல்லாததும் சொல்வதுமாய் ஒரே சண்டையா அந்த நாடகம் உணர்வு பூர்வமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

கேட்டுக்கொண்டிருந்த ரமணனுக்குக் கண்ணீர் வந்ததுதங்களையே வைத்து எழுதிய நாடகம் போலிருந்தது.

|வேண்டாம்இனிமேல் இந்தச் சண்டையே வேண்டாம்!| ரமணன் முடிவெடுத்தான்.

அண்ணி மாலதி தங்களுடன் வலியச் சண்டைக்குவர அடிப்படைக் காரணம்அக்காவைக் கூப்பிடச் செலவழித்த அரைவாசிக் காசைத் தாங்கள் கொடுக்கவில்லை என்பது தான்.

அதை முதலில் கொடுத்தாக வேண்டும்தொலைபேசியை எடுத்து கடன் வாங்கிய மணியின் இலக்கங்களை அழுத்தினான்.

'ஹலோ!' என்று மறுமுனையில் இழுவை இராகத்தில் மணியின் மனைவியின் குரல் வந்தது.

'நான் ரமணன் கதைக்கிறன்மணி இல்லையோ!'

'சாப்பிடுகிறார்,  கொஞ்சம் பொறுத்து எடுங்கோ!'

'சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கதைக்கலாம்;..., நானும் படுத்திருந்து கொண்டுதான் கதைக்கிறன்.' கிண்டலாகச் சொன்னான் ரமணன்.

தொலைபேசி கை மாற சில வினாடிகள் சென்றன.
'சொல்லு ரமணன்எப்பிடிச் சுகமாக இருக்கிறியே...? வந்து பார்க்கலாமென்றால் எங்கை....?' என்று சமாளிக்கும் தோரணையில் கதைத்தான் மணி.

'நான் சுகமாக இருக்கிறன்முழுக்காசும் உடனே தேவைஇதாலை பெரிய பிரச்சனை... எப்ப தாறாய்?'

'உடனை வேணுமென்றால் என்னண்டு...? கொஞ்சக்காலம் பொறுதருவன்தானே...'

'நீ தருவாய் தான்ஆனால் அதுவரைக்கும் என்னாலை பொறுக்க முடியாதுஒரு கிழமையாலை தாறன் என்று சொல்லி வாங்கினனிஇப்ப இரண்டு வருசத்துக்கு மேலையாகுது... மார்க் இருக்கேக்கை வாங்கினாய்இப்ப ஈரோவும் வந்து ஒரு வருடம் ஆகப் போகுது!'

'எனக்கு இப்ப கஸ்டம்எல்லாப்பக்கத்தாலும் இறுகிப் போய் நிற்கிறன்பிள்ளையின்ரை சாமத்தியவீடு கூடக் கடனிலை தான் செய்யப் போறன்!'

'மணிஎனக்கு அந்த இந்தக் கதை தேவையில்லைமனிசன் எண்டா ஒரு நாணயம் இருக்க வேணும்நல்லாப் பழகினனி என்று தான் தேவைக்கு வைத்திருந்த காசைத் தந்தனான்.'

'அதுசரி மச்;சான்நான் ஒத்துக்கொள்ளுறன்என்ன செய்யிறதுமாறிமாறி ஒரே கஸ்டம்.'

'மணிசும்மா பிதற்றாதை என்ன... ! நீ காசைத் திருப்பித் தர விரும்பினால் எப்பவோ தந்திருக்கலாம்நியாயத்துக்கு மனிசன் கட்டுப்பட வேணும்ஒரு கிழமை ரைம் தாறன்இதுதான் கடைசித்தவணைபிழைச்சுதென்றால் உன்னட்டையிருந்து காசு வாங்க வேறை வழி பார்க்க வேண்டிவரும்சொல்லிப் போட்டன்;' 

சூட்டோடு தொலைபேசியை வைத்தான் ரமணன்அவன் மனம் இன்னும் கொதித்துக் கொண்டிருந்தது.
|இது என்ன சனங்களப்பா...! சீ... வாங்கின கடனைத் திருப்பித் தராமற் சேர்க்கஸ் காட்டிக்கொண்டு திரியுதுகள்!
நம்பியெல்லே தந்தவன் என்று ஒருக்கா நினைக்கினமே...? கொடுத்திட்டு நான் படுகிற கஸ்டம்குடும்பமே பிரியப் போகிற கட்டத்திலை நான் இங்கை...|

வீட்டுமணி அடித்தது.
தாண்டித்தாண்டிபொல்லை ஊன்றியவாறு போய்க் கதவைத் திறந்தான் ரமணன்.
அங்கே சிவரஞ்சினி நின்றாள்.
'அக்காவாங்கோ...! வாங்கோ!' வரவேற்றான் ரமணன்.

'என்ன முகமெல்லாம் ஒரு மாதிரிக் கிடக்குஉடம்பு சரியில்லையே?' அக்கறையுடன் கேட்டாள் சிவரஞ்சினி.

'சீ... அதொன்றுமில்லை.'

'என்னவாம் டொக்டர்...?'

'டொக்டருக்கென்ன எல்லாம் ஓகே.. ஓகே என்று சொல்லுறார். எனக்கெண்டால் இரவிலை ஒரே கொதிவலி, அது அப்படித்; தானாம்;... என்ன செய்யிறது? இன்னும் இரண்டு கிழமை மருத்துவலீவு தாறன், பிறகு வேலைக்குப் போகலாமென்று சொல்லிப்போட்டார்.'
டொக்டருக்கென்ன எல்லாம் ஓகே.. ஓகே என்று சொல்லுறார். எனக்கெண்டால் இரவிலை ஒரே கொதிவலி, அது அப்படித்; தானாம்;... என்ன செய்யிறது? இன்னும் இரண்டு கிழமை மருத்துவலீவு தாறன், பிறகு வேலைக்குப் போகலாமென்று சொல்லிப்போட்டார்.'

( மிகுதி, பகுதி - 2 இல் உள்ளது . )


-njhlu;e;J thrpf;f.
Älterer Post  என்பதில் கிளிக் பண்ணுக .



Keine Kommentare: